சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விருந்துக்கு அழைத்து.. வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்! சேலத்தில் சிக்கிய அரசியல் தலைகள் -பரபரப்பு

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் அரசியல்வாதிகளிடம் பணம் பறிக்கும் வகையில் பெண் ஒருவர் ஆபாசமாக போனில் பேசி வந்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது. அந்தரங்க வீடியோ எடுத்த அரசியல் பிரமுகர்கள் சிலரை அந்த பெண் மிரட்டியதாகவும் சேலம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் சேலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களிடம் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

சேலத்தில் பிரபலமாக இருக்கும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 6 அரசியல் பிரமுகர்களை தேர்வு செய்து அதில்
3 பேரை மடக்கி அவர்களிடம் போனில் கலைச்செல்வி சாட் செய்து வந்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக இவர்களிடம் பேசி நெருக்கம் ஆன அந்த பெண் ஒவ்வொருவரையும் தனி தனியாக வீட்டிற்கு விருந்து என்று கூறி அழைத்து இருக்கிறார்.

 விருந்து

விருந்து

வீட்டிற்கு விருந்து வைக்கிறேன் என்று கூறி அந்த அரசியல் பிரமுகர்களை கலைச்செல்வி அழைத்துள்ளார். இதில் 6 பேரில் 3 பேர் மட்டுமே அந்த பெண்ணுக்கு மயங்கி அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். வெவ்வேறு நாட்களில் இவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைத்திலும் கலைச்செல்விக்கு செல்வம் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

சூரமங்கலம்

சூரமங்கலம்

இந்த நிலையில் கலைச்செல்வி எடுத்த வீடியோவை வைத்து செல்வம் அந்த அரசியல் பிரமுகர்கள் 3 பேரையும் மிரட்டி இருக்கிறார். உங்கள் வீடியோ ரிலீஸ் செய்துவிடுவோம்.. உங்கள் கட்சியின் தலைமைக்கு வீடியோவை அனுப்பி விடுவோம் என்று கூறி மிரட்டி இருக்கிறார். காசு கொடுத்தால் உங்களுக்கு சிக்கல் இல்லை என்று கூறி செல்வம் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் சில அரசியல் பிரமுகர்கள் செல்வத்திற்கும், கலைசெல்விக்கும் பயந்து லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். மிரட்டிய போதெல்லாம் இவர்கள் பணம் கொடுத்துள்ளனர்.

 கலைச்செல்வி

கலைச்செல்வி

இதுவரை எல்லாம் கலைச்செல்வி -செல்வம் திட்டப்படி சென்றுள்ளது. ஆனால் மிரட்டி வாங்கப்பட்ட பணத்தை பங்கு போடுவதில் செல்வம் மற்றும் ரூபக் என்ற நபர் இடையே பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது. ரூபக் என்பவர் செல்வத்திற்கு உடந்தையாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. தனக்கு வர வேண்டிய பங்கு வரவில்லை என்ற கோபத்தில் ரூபக் கலைச்செல்வியை கடத்தி கொண்டு போய் வீடியோ எடுத்து வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

அதாவது செல்வத்தோடு சேர்ந்துதான் அரசியல் வாதிகளை மிரட்டி பணம் வாங்கினோம் என்று கலைச்செல்வியிடம் வாக்குமூலம் வாங்கி உள்ளார் ரோபாட். இந்த வீடியோவையும் ரூபக் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், செல்வம் சொல்லித்தான் அரசியல்வாதிகளை ஏமாற்றினேன். 6 அரசியல் பிரமுகர்களை மடக்க வேண்டியது. 3 பேர்தான் சிக்கினார்கள் என்று கலைச்செல்வி ஒப்புக்கொண்டு உள்ளார்.

நாகேந்திரன்

நாகேந்திரன்

இந்த நிலையில் ரூபக் கஸ்டடியில் இருந்து தப்பித்து வந்த கலைச்செல்வி தற்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார். நாகேந்திரன் என்ற அரசியல் பிரமுகரின் ஆட்கள் தன்னை கொலை செய்ய முயல்வதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கலைச்செல்வி ஏமாற்றிய 3 அரசியல் பிரமுகர்களில் ஒருவர்தான் நாகேந்திரன். தன்னிடம் ஏமாற்றம் அடைந்த விரக்தியில் தன்னை நாகேந்திரன் கொலை செய்ய முயல்வதாக கலைச்செல்வி குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 மற்ற 2 பேர் புகார் தரவில்லை

மற்ற 2 பேர் புகார் தரவில்லை

இந்த நிலையில் கலைச்செல்வி, செல்வத்திற்கு எதிராக சேலம் போலீசிடம் நாகேந்திரன் புகார் அளித்துள்ளார். வீடியோ எடுத்து பணமோசடி செய்வதாக நாகேந்திரன் புகார் அளித்துள்ளார். கலைச்செல்வியிடம் ஏமாந்த மற்ற அரசியல் பிரமுகர்கள் சர்ச்சையை தவிர்க்க வேண்டும் என்பதால் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சேலம் போலீசார் தற்போது கலைச்செல்வி - செல்வம் இருவரையும் கைது செய்து விசாரிக்கும் திட்டத்தில் உள்ளனர். பல்வேறு அரசியல் பிரமுகர்களிடம் கலைச்செல்வி - செல்வம் இருவரும் பல லட்சங்களை ஏமாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
Salem woman cheats three politicians after becoming close with them with a help of male friend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X