அட நம்புங்க.. நம்ம சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் மணமகன் பெயர் சோசலிசம்; மணமகள் பெயர் மம்தா பேனர்ஜி
சேலம்: சேலம் அருகே அடுத்த வாரம் நடைபெறும் ஒரு திருமணத்துக்கான அழைப்பிதழ்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன சுவாரசியம் அந்த திருமண அழைப்பிதழில் என்கிறீர்களா?
சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் வரும் 13-ந் தேதி ஒரு திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் சுப்பராயன் எம்.பி. ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி மோகனின் 3-வது மகனுக்குதான் இந்த திருமணம் நடக்கிறது. மணமகள் அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகள்!
மணமகனின் பெயர் A.M. சோசலிசம். ஆம் இப்படித்தான் 3-வது மகனுக்கு பெயர் வைத்திருக்கிறார் மோகன். மற்ற 2 மகன்களுக்கும் மோகன் வைத்த பெயர் என்ன தெரியுமா? கம்யூனிசம், லெனினிசம். அத்துடன் முடியவில்லை... இடதுசாரி பிரியம்.. பேரனுக்கு மார்க்சிசம் என பெயர் வைத்திருக்கின்றனர்.
சரி மணமகனின் பெயர்தான் இப்படி சோசலிசம் என வித்தியாசமாக இருக்கிறதே என நினைக்காதீர்கள்..
மணமகளின் பெயரை கேட்டாலே அதிரும்.. ஆம் மணமகள் பெயர் மம்தா பேனர்ஜி. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுக்கு முடிவுரை எழுதிய அதே மம்தா பானர்ஜியின் பெயர்தான் மணமகளுக்கு வைக்கப்பட்டிருக்கிறது!
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications