Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சர்ப்ரைஸ்".. சேலத்துக்கே கிளம்பி வந்த ஸ்டாலின்.. கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்.. செம எதிர்பார்ப்பு

களப்பணியில் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள இன்றைய தினம் சேலம் வருகிறார் முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்றைய தினம் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.. சேலத்தில் 2 நாள் முகாமிடும் முதல்வர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட அரசு நிர்வாக செயல்பாடுகள், சட்டம், ஒழுங்கு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ள போகிறார்.. முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசுத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மண்டல வாரியாக, மாவட்டங்களில் செயல்படுத்தப்படும், அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக "கள ஆய்வில் முதல்வர்" என்ற திட்டத்தை துவக்கினார்.

வேலூர்

வேலூர்

அதன்படி, முதல் கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் கள ஆய்வு செய்தார்.. கடந்த 1, 2 தேதிகளில் வேலூர் மண்டலத்துக்குட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.. 4 மாவட்ட போலீஸ் எஸ்பிக்களுடன், சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 4 மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.. அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், மறுநாள் 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.. அனைத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்தவும் அப்போது முதல்வர் அறிவுறுத்தினார்.

 ஸ்பீடா முடிங்க

ஸ்பீடா முடிங்க

இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்துக்கு இன்று வருகை தந்துள்ளார்.. சேலம் மண்டல அளவில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் ஸ்டாலின், இன்று மாலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்திலும், நாளை (வியாழக்கிழமை) 4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்துள்ளார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 ஆய்வுக்கூட்டம்

ஆய்வுக்கூட்டம்

நேற்று முன்தினம், ஆய்வுக்கூட்டம் நடக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது, முதல்வர் செல்லும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும், கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைவரையும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது... இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்று முதல் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

செக்யூரிட்டிகள்

செக்யூரிட்டிகள்

இன்று இரவு சேலத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்.. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள், நிறைவுற்ற பணிகள், நலத்திட்ட உதவிகள், அரசின் சலுகை திட்டங்கள் குறித்து கலந்தாய்வில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபடுகிறார். மேலும், இனிவரும் நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

 சர்ப்ரைஸ் விசிட்

சர்ப்ரைஸ் விசிட்

வழக்கமாக, கடந்த காலங்களில், முதலமைச்சர்கள் எந்த மாவட்டத்துக்கு சென்றாலும், அவர்கள் செல்லும் பகுதிகளை மட்டுமே அதிகாரிகள் புதுப்பொலிவுடன் வைத்துக் கொள்வார்கள்.. ஆனால், இப்போது முதல்வர் "சர்ப்ரைஸ் விசிட்" செய்ய போகிறார் என்றதுமே மாவட்டம் முழுவதையும் சீர்படுத்திடவும், போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அதிரடியாக ஈடுபட்டுவிட்டனராம்.. இதைதான், மாவட்ட மக்கள் ஆச்சரியப்பட்டு பார்த்தார்களாம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+