தனியரசு கூடாரத்தை கலைக்கும் எடப்பாடி பழனிசாமி! அதிமுகவில் இணைந்த கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள்!
சேலம்: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்த நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து தனியரசுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுவை பொறுத்தவரை சசிகலா ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். 2 தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு பெற்றுக் கொடுத்தவர் என்பதால் சசிகலா மீதான நன்மதிப்பை இன்று வரை வெளிப்படுத்தி வருகிறார் தனியரசு.

இதனிடையே தனியரசுவை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து முன்னெடுத்து வந்த நிலையில் தனியரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தனியரசுவின் கூடாரத்தை ஆட்டம் காண வைக்கும் வகையில் கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகளை கொத்து கொத்தாக அதிமுக பக்கம் அழைத்து வந்து சேலத்தில் இன்று இணைப்பு விழாவையும் நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் ஏற்பாட்டில் இந்த இணைப்பு விழா வைபவம் நடந்துள்ளது. அதில் பேசிய கொங்கு இளைஞர் பேரவை முன்னாள் நிர்வாகி ஒருவர், தனியரசுவை நம்பிச் சென்றதற்கு தங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் அல்வா மட்டுமே கொடுத்திருக்கிறார் எனவும் குமுறினார். சின்னம்மா என்றும் ஓ.பன்னீர்செல்வம் என்றும் இன்னும் பேசிக்கொண்டிருக்கும் அவர், தன்னை நம்பி வந்த இளைஞர்களுக்கு என்ன செய்திருக்கிறார் என வினவினார்.
அதேபோல் இணைப்பு விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கொங்கு இளைஞர் பேரவையிலிருந்து அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்றதுடன் கட்சிப்பணிகளில் முழுமையாக ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார். தனியரசுவை விமர்சித்து பேசுவதை என்னக் காரணத்தினாலோ எடப்பாடி பழனிசாமி தவிர்த்ததுடன் திமுகவை மட்டும் விமர்சித்தார்.
தங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை அதிமுக பக்கம் அழைத்துச் சென்ற மாஜி அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் மீது தனியரசு தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஓரிரு நாட்களில் பிரஸ்மீட் வைத்து எடப்பாடி பழனிசாமி மீதான தனது கோபத்தை தனியரசு கொட்டித் தீர்க்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்..பொய்க்கால் குதிரை அரசு! விஜய்யை வெளுத்த எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி! -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்!












Click it and Unblock the Notifications