அமைச்சர் கே.என்.நேரு கார் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி- சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!
சேலம் : சேலத்தில் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைச்சர் காரின் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குப்தா என்பவர், ஆட்டையாம்பட்டி பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான காலி நிலத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மளிகை கடையை அவரால் சரிவர நடத்த முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும், கடைக்கு வாடகையும் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனிடையே, கடந்த திங்கட்கிழமை ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், சந்திரன் ஆகியோர், பத்துக்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து, வீட்டில் இருந்த தினேஷ் குப்தா உள்ளிட்டோரை தாக்கியதோடு, கடையை பூட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் காரின் முன்பு, தினேஷ் குப்தாவும், அவரது மனைவியும் திடீரென தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தியதால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தற்கொலைக்கு முயன்ற பெண் கூறியதாவது : தங்களது முன்னோர்கள் முதல் பல ஆண்டுகளாக கடையை நடத்தி வருகிறோம். எனது கணவருக்கு உடல்நலக் குறைவால் கடையை திறக்க முடியாத நிலையில், கடந்த 10 நாட்களாக வாடகை கொடுக்க வில்லை. எங்களது கடையை பறித்துக்கொண்டனர். கடையை காலி செய்ய வேண்டும் என ஊரில் உள்ளவர்கள் மிரட்டுகிறார்கள். வாழ்வாதாரம் இன்றி வீதியில் நிற்கும் தங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
தற்கொலைக்கு முயன்ற தம்பதியை, விசாரணைக்காக டவுன் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் தலைமையில் மாவட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications