கிழிந்திருந்த சுடிதார்.. கழுத்தில் நகக்கீறல்.. 3 வட மாநில இளைஞர்கள்.. மொத்தமாக வளைத்த சேலம் போலீஸ்!
3 பேரை கொன்ற 3 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்
சேலம்: இளம்பெண்ணின் சுடிதார் கிழிந்திருந்தது.. அவரது கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தது.. இதை வைத்துதான் 3 வடமாநில இளைஞர்கள் மீது முதல் சந்தேகம் எழுந்தது.. சேலத்தில் அந்த இளம்பெண் உட்பட 3 பேர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்.. இவருக்கு வயது 27.. இவரது மனைவி வந்தனா.. இவருக்கு வயது 25... இத்தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
ஆகாஷின் உறவினரான சிறுவன் சன்னிக்கு 16 வயதாகிறது.. இவர்கள் எல்லாரும் சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே பெருமாம்பட்டி கிலான் வட்டம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

விடுமுறை
அதே பகுதியில் ஒரு வெள்ளிப்பட்டறையில் ஆகாஷ், வந்தனா, சன்னி ஆகியோர் கூலித்தொழிலாளர்களாகவும் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆகாஷ், வந்தனா, சன்னி ஆகியோர் வீட்டில் அன்றைய தினம் சாப்பிட்டு தூங்கி கொண்டு இருந்தனர்.

குழந்தை
பிறகு நடுராத்திரி குழந்தை ரொம்ப நேரமாக அழும் சத்தம் கேட்டது.. இதனால் அக்கம் பக்கம் வசித்தவர்கள் ஆகாஷ் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.. வந்தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். வீட்டுக்கு பின்புறம், ஆகாஷும், சன்னியும் கழுத்து அறுபட்டு அவர்களும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.. இதை பார்த்து அலறிய பொதுமக்கள் உடனடியாக இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

3 சடலங்கள்
விரைந்து வந்த போலீசார் 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.. இந்த சமயத்தில்தான், அதே பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 4 இளைஞர்களும் மாயமானது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான் விழுந்தது.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தனர்.

தகராறு
அப்போது அந்த 4 இளைஞர்கள் தப்பி ஓடுவது தெரிந்தது.. அநேகமாக அவர்கள்தான் இந்த 3 கொலைகளையும் செய்திருக்கலாம் என்று போலீசார் முடிவு செய்து அவர்களை தேடும் வேலையில் ஈடுபட்டனர்.. இந்த கும்பல், இதே பகுதியில்தான் 5 வருஷத்துக்கு முன்பு தங்கி இருந்துள்ளனர்... கொலை நடந்த 2 நாளைக்கு முன்புதான் ஆகாஷ் குடியிருக்கும் பகுதிக்கு வந்திருக்கிறார்கள்.. இவர்களுக்குள் கொடுக்கல் - வாங்கல் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. ஆனால், கொலை செய்யப்பட்ட வந்தனாவின் கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன.. அவரது சுடிதாரும் கிழிந்த நிலையில் கிடந்தது.

பலாத்காரம்
அதனால் அவரை பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.. எனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப் போர்ட் வந்தால்தான் அதை பற்றி உறுதியாக தெரியும். இந்நிலையில், அந்த வடமாநில இளைஞர்கள் தப்பிவிடாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. அவர்களது செல்போன் சிக்னலை வைத்து பார்த்ததில், கொலையாளிகள் பாலக்காடு ரெயில்வே ஸ்டேஷன் பகுதியில் சுற்றி வருவது தெரிந்தது.. அதனால் ராத்திரியோடு ராத்திரியாக சேலம் போலீசார் அங்கு சென்று 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்... ஒருவர் மட்டும் தப்பி உள்ளார்.. அவரையும் தேடி வருகிறார்கள்.

அலறி கத்தினார்
பிடிபட்ட 3 பேரும் போலீசில் சொல்லும்போது, "நேற்று முன்தினம் நாங்க 4 பேரும் தண்ணி அடித்தோம்.. ஆகாஷின் மனைவியை பலாத்காரம் செய்ய முடிவு செய்தோம்.. அவர் வீட்டிற்குள் நுழைந்தோம்.. ஆனால் அவர் அதற்கு மறுத்தார்.. அலறி கூச்சல் போட்டார்.. சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்கள் என்று பயந்து போன நாங்கள் அவரது கழுத்தை அறுத்தோம்.. அப்போது வந்தனா அலறல் கேட்டு ஆகாஷூம், சன்னியும் ஓடிவந்தனர்.. அவர்களையும் கழுத்தில் அறுத்துவிட்டு தப்பி ஓடினோம்" என்றனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications