அரசு பேருந்தில் துபாய்க்கு டிக்கெட்.. ரூ10,000 கட்டணம்.. சேலத்தில் நடந்தது என்ன? வெளிவந்த உண்மை!
கருஷ்ணகிரி: ஈரோடு மாவட்டம் பவானி பைபாஸில் இருந்து துபாய்க்கு ரூ.10,000 டிக்கெட் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்சில் வழங்கப்பட்டதாக அதில் பயணம் செய்த நபர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த டிக்கெட்டை புகைப்படம் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு இருந்த நிலையில், இந்த டிக்கெட் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. துபாய்க்கு பஸ்சில் போக முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், எப்படி இந்த சம்பவம் நிகழ்ந்தது என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இது குறித்து தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி பைபாஸ் பகுதியில் இருந்து பி. தாமோதரன் என்ற பயணி தனது நண்பர் எம். ராஜாவுடன் கோயம்புத்தூர் - பெங்களூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஓசூர் செல்வற்காக ஏறினார். மேலும் ஓசூருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க என கண்டக்டரிடம் அதற்கு கட்டணமாக ரூ.150 செலுத்தி இருக்கிறார். டிக்கெட்டை வாங்கிய பிறகு அதை பார்த்த தாமோதரன் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தார்.

துபாய்க்கு ரூ.10,000 டிக்கெட்
காரணம், டிக்கெட்டில் பவானி பைபாஸ் முதல் "துபாய், ஐக்கிய அரபு அமீரகம் (UAE)" என அச்சிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, கட்டணமாக ரூ.10,000 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் தாமோதரன் பகிர்ந்த நிலையில், அந்த பதிவு வேகமாக பரவி பலரும் நகைச்சுவையாக கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் மண்டல அதிகாரிகள் விளக்கம் அளித்ததாகவும் தகவல் பரவியது. அந்த தகவல் என்னவென்றால், டிக்கெட் வழங்கும் மின்னணு கருவியில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறே இந்த தவறுக்கு காரணம் என்றும், பயணியிடம் வழக்கமான ரூ.150 கட்டணம்தான் வசூலிக்கப்பட்டது என்றும் தெரிவித்தபோல் மற்றொரு தகவலும் பரவியது.
தமிழக அரசு விளக்கம்
இந்த வித்தியாசமான டிக்கெட் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேற்கண்ட இரு தகவல்களுமே வதந்தி என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பவானி பைபாஸ் To துபாய் - ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் என பரவும் தவறான தகவல் !
பரவும் செய்தி
ஈரோடு பவானி பைபாஸ் முதல் துபாய் வரை செல்ல அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
இது முற்றிலும் தவறான தகவல்.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் (சேலம் கோட்டம்) அளித்துள்ள விளக்கத்தில், "சமூக வலைதளங்களில் பரவும் டிக்கெட் (எண்:27846) ஓசூர் புறநகர் கிளைக்கு உட்பட்ட ரூட் எண் 457F-ல் 06-06-2026 அன்று பவானி பைபாஸில் இருந்து கோயம்புத்தூர் வரை ரூ.100-க்கு வழங்கப்பட்டது.
பவானியிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் பயணச்சீட்டை போலியாகத் திருத்தி, அதிலிருந்த 'பவானி - கோயம்புத்தூர்' என்ற பயண விவரத்தை 'பவானி - துபாய்' எனவும், ரூ.100 கட்டணத்தை ரூ.10,000 எனவும் மாற்றியமைத்து தொழில்நுட்ப முறையில் போலியாக்கம் செய்யப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்!" என்று விளக்கமளித்துள்ளது.
-
அரசு போக்குவரத்து கழகத்தில் திமுகவினர் 4,112 பேர் மாற்று வேலைகளில் இருப்பதாக வழக்கு.. ஐகோர்ட் அதிரடி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு














Click it and Unblock the Notifications