சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'ஓரம் போ'.. நடுரோட்டில்.. சட்டென குச்சியை எடுத்து மாடுகளை ஓட்டிய சப்-இன்ஸ்பெக்டர்.. வைரல் வீடியோ!

Google Oneindia Tamil News

சேலம்: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் முக்கியமான சாலைகளில் சுற்றித் திரிவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

Recommended Video

    ஓரம் போ.. நடுரோட்டில்.. சட்டென குச்சியை எடுத்து மாடுகளை ஓட்டிய சப்-இன்ஸ்பெக்டர்.. வைரல் வீடியோ!

    இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன. திருச்சி மாநகராட்சியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் இதனை கட்டத் தவறினால் கால்நடைகளும் பறிமுதல் செய்யப்படும் என சமீபத்தில் திருச்சி மாநகராட்சி அதிரடியாக அறிவித்தது.

    சென்னையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதி! சென்னையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதி!

    சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

    சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

    சேலம் மாநகரப் பகுதிகளிலும் அதிக அளவில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் அதிக அளவில் சாலைகளில் சுற்றித்திரிந்து சாலைகளில் உறங்குவதால் அதிகளவில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு விபத்துகள் நிகழ்கிறது. இதுபற்றி கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கண்டு கொள்வதில்லை.

    போக்குவரத்து நெரிசல்

    போக்குவரத்து நெரிசல்

    சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதான சாலைகளில் இன்று காலை 10-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையின் நடுவே நின்று போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியது இதனால் அந்த வழியாக சென்ற பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மேற்கொண்டு செல்லமுடியாமல் சாலைகளில் நின்றது.

    மாடுகளை ஓட்ட தொடங்கினார்

    மாடுகளை ஓட்ட தொடங்கினார்

    இதனால் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றார். இந்த நிலையில் அந்த வழியாக சேலம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி சென்று கொண்டிருந்தார். கால்நடைகளால் நெரிசல் ஏற்படுவதை கண்ட அவர் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக கையில் குச்சி எடுத்து மாடுகளை ஓட்ட தொடங்கினார்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    தொடர்ந்து அவர் மாடுகளை சாலையில் ஓட்டத் தொடங்கினார். போலீஸ் சீருடையில் சப்-இன்ஸ்பெக்டர் மாடுகளை ஓட்டிச் சென்றதை வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து சென்றனர் பொறுப்புமிக்க காவலரின் இந்த செயலால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அங்கு இருந்து சென்றன. சப்-இன்ஸ்பெக்டர் மாடுகளை ஓட்டிய வீடியோ காட்சி டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    English summary
    Many praised the police sub-inspector who took the stick and drove the cows which were obstructing the traffic. The video of the inspector driving the cows has gone viral on social media, including Twitter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X