சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திரும்பி பார்க்க வைத்த மணமக்கள்.. சேலம் அருகே சோசலிசம்- மம்தா பேனர்ஜிக்கு எளிமையாக நடந்தது திருமணம்!

Google Oneindia Tamil News

சேலம்: அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மணமக்களான சோசலிசம் மற்றும் மம்தா பேனர்ஜி திருமணம் இன்று சேலம் அருகே எளிமையாக நடைபெற்றது.

சேலம் அருகே அமானி கொண்டலாம்பட்டி காட்டூரை சேர்ந்த மோகன், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். தமது குடும்பத்தினருக்கு இடதுசாரி சித்தாந்தங்களான லெனினிசம், கம்யூனிசம், சோசலிசம், மார்க்சிசம் என்ற பெயரையே சூட்டி இருக்கிறார்.

அட நம்புங்க.. நம்ம சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் மணமகன் பெயர் சோசலிசம்; மணமகள் பெயர் மம்தா பேனர்ஜி அட நம்புங்க.. நம்ம சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் மணமகன் பெயர் சோசலிசம்; மணமகள் பெயர் மம்தா பேனர்ஜி

மோகனின் 3-வது மகனின் பெயர் சோசலிசம். சோசலிசத்துக்கு அதே ஊரில் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மே.வங்க முதல்வரின் பெயர்

மே.வங்க முதல்வரின் பெயர்

அந்த மணமகளின் பெயர் மம்தா பேனர்ஜி. ஆம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜியின் பெயர்தான் மணமகளுக்கு வைக்கப்பட்டது.

மம்தா மீது பற்று

மம்தா மீது பற்று

ஏனெனில் மணமகளின் தந்தை காங்கிரஸில் தீவிரமாக செயல்பட்டவர். அதனால் மகளுக்கு மம்தா பேனர்ஜி என்றே பெயரை வைத்துவிட்டார். மேற்கு வங்க அரசியலில் இடதுசாரிகளும் மம்தா பேனர்ஜியும் எலியும் பூனையுமாக இருக்கின்றனர்.

இன்று எளிமையான திருமணம்

இன்று எளிமையான திருமணம்

ஆனால் சேலத்திலோ மம்தா பேனர்ஜியை சோசலிசம் திருமணமே செய்து இன்று இல்வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தனர். சேலம் அருகே அமானி கொண்டலாம்பட்டி காட்டூரில் எளிமையான முறையில் இந்த திரும்பிப் பார்க்க வைத்த திருமணம் நடைபெற்றது.

குவியும் வாழ்த்துகள்

குவியும் வாழ்த்துகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இந்த திருமணம் எளிமையாக நடைபெற்றது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்த சோசலிசம்- மம்தா பேனர்ஜி தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

English summary
Salame's Young Girl Mamata Banerjee today wedded with Socialism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X