'அத்துமீறு' என்ற சொல்லுக்கு பொருள் தெரியாமல்.. திருமாவளவன் பேச்சால் பறந்த விசில்! அன்புமணிக்கு பதில்
சேலம்: "அத்துமீறு" என்று நம் இளைஞர்களிடம் சொல்ல மாட்டேன் என்று கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்-க்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். அத்துமீறு சொல்லுக்கான பொருளை கூறியதோடு, அத்துமீறு என்ற சொல் அனைத்து சமூகங்களுக்கானது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
அண்மையில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், அடங்கமறு, அத்துமீறு என்று இளைஞர்களை தூண்டிவிட மாட்டேன். இளைஞர்கள் அனைவரும் நன்றாக படித்து, எந்த வழக்குகளும் இல்லாமல் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று பேசி இருந்தார்.

அன்புமணி ராமதாஸின் இந்த பேச்சு விசிக தலைவர் திருமாவளவனை அட்டாக் செய்வதாக அமைந்திருந்தது. ஏனென்றால் திருமாவளவன் பல்வேறு தருணங்களில், அடங்க மறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி என்று தனது மக்கள் விடுதலை பாதையை பேசி இருக்கிறார். தற்போது அன்புமணியின் பேச்சு காரணமாக மீண்டும் திருமாவளவன் தனது பேச்சிற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
அதில் திருமாவளவன் பேசுகையில், மக்கள் அமைப்பாதவன் மூலமாகவே அத்துமீற முடியும். அத்துமீறலால் மட்டுமே அடக்குமுறைகள் உடையும். இதுமிகவும் எளிமையானது. உனக்கு எதிரான அடக்குமுறைகள் எப்போதும் உடையும் என்றால், நீ கட்டுண்டு கிடக்க கூடாது. உனக்கு அத்து போட்டிருக்கும் அத்துக்குள் முடங்கி கிடக்க கூடாது. அதனை மீற வேண்டும்.
தனி நபரால் அதனை மீற முடியாது. ஒரு அமைப்பால் மட்டுமே மீற முடியும். அமைப்பாய் திரண்டு கோயிலுக்குள் நுழைந்தால் எதையும் செய்ய முடியாது. அத்துமீறலுக்கு என்ன பொருள் என்று புரிந்து கொள்ளாமல், சிலர் அத்துமீறு என்ன சொல்ல மாட்டேன், அதனை செய், இதனை செய் என்று சொல்ல மாட்டேன்.. இப்படி சொல்லி நம்மை கலாய்க்கிறார்களாம்..
அத்துமீறு என்ன சொல்லுக்கு பின் ஒரு அரசியல் இருக்கிறது. காலம் காலமாக இருந்துவந்த அடிமைத்தனத்தை தகர்த்தெறியக் கூடிய சொல். அது ஒரு சொல்லுக்கான சொல் அல்ல. அனைத்து சாதிகள், அனைத்து மதங்களுக்கான சொல்.. எங்கே அடக்குமுறை இருந்தாலும், அந்த அடக்குமுறை எதிர்த்து போராடுவதற்கான போர்க்குணத்தை பெறு என்று பொருள் என தெரிவித்துள்ளார்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications