சேலம் கோட்டையை அசைக்க போகிறாரா விஜய்? செங்கோட்டையன் செய்யும் மாயம்.. அந்த விஐபியும் தவெக வருகிறாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய், அரசியல் தளத்தில் தன்னுடைய விறுவிறு செயல்பாடுகளாலும், நீண்ட நேர பேச்சுகளாலும் கவனத்தை ஈர்த்துள்ளார்.. குறிப்பாக ஈரோடு பொதுக்கூட்டத்துக்கு பிறகு அவரிடம் இந்த மாற்றம் தென்படுவதாக கூறப்படுகிறது.. அதேபோல தவெகவிலும் சில மாற்றங்கள் நடக்க துவங்கி இருக்கிறதாம். அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

விஜய் அதிமுகவை சீண்ட துவங்கிவிட்டாரோ? என்று சந்தேகம் வலுத்து வருகிறது.. காரணம்,. விஜய் அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து என்றும் அவர்களின் பெயரை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்ல முடியாது என்றும் ஈரோடு கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

vijays-next-public-meet-in-salem-and-sengottaiyan-s-master-stroke-on-the-cards-vip-entry-rumours-in

டம்மி செய்து பேசும் விஜய்

அதேபோல அண்ணாவும் எம்ஜிஆரும் பத்தாண்டு இடைவெளியில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள். அவர்கள் வழியில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த போகிறோம் என்று கூறி, கட்சி கொடிகளிலும் இந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்த உரை, அவரது ரசிகர்களுக்கும் கட்சியினருக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆனாலும் விஜய் அதிமுக கட்சியை குறைவான ஆதரவு கொண்டது போல் காட்டுவது ஏன்? அதிமுகவை டம்மி செய்வதால் தவெகவின் பலம் கூடிவிடுமா என்ன? இதுபோலவே அதிமுகவை குறைத்து மதிப்பிட்டு பேசி கொண்டிருந்தால், தேர்தலில் அதிமுகவினரும், தவெகவினரும் இடையே கடுமையான வார்த்தை போர்கள், பிரச்சார தாக்கங்கள் ஏற்படலாம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அங்கீகாரம் - விஜய் பேச்சு

அதேபோல விஜய்யின் சமீபத்திய பேச்சுகள் கட்சியில் புதிதாக இணைவோருக்கு டானிக் தரும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஈரோட்டில் பேசும்போது, "செங்கோட்டையன் போன்ற முக்கிய பிரமுகர்களை தவெகவில் வந்துள்ளது கட்சிக்கு பெரிய பலம். அவரை போல இன்னும் பலர் கட்சியில் சேர உள்ளனர்.. அவர்களுக்கெல்லாம் உரிய அங்கீகாரம் தரப்படும் என்று கூறியிருந்தார்.

விஜய்யின் இந்த பேச்சை கேட்டதுமே, இதுவரை கட்சியில் சேர தயங்கிய முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாம்.. எனவே சில முன்னாள் எம்எல்ஏக்கள் விரைவில் தவெகவில் நோக்க வரக்கூடும் என்கிறார்கள்..

தவெக - விஐபி

ஈரோடு பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட உற்சாகத்தையும் காரணமாக வைத்தே, கட்சியில் இணைவதற்கு மேலும் சில மூத்த தலைவர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தவெகவுக்கு புதிய உறுப்பினர்கள் மட்டுமல்ல, வட்டார ஆதரவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த தேர்தலில் கட்சியின் தாக்கத்தை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு நடுவில் விஜய் அடுத்த பொதுக்கூட்டத்தை கொங்கு மண்டலமான சேலத்தில் ஏற்பாடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளாராம்.. இதற்காக வருகிற 30-ந் தேதி அங்கு பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடப்பதாகவும் தெரிகிறது.

சேலம் செங்கோட்டையன் கோட்டை

சேலம் தொகுதி எடப்பாடி பழனிசாமியின் உறுதியான அரசியல் அடித்தளமாகும்.. அங்கு அவருக்கு நீண்ட காலமாக வலுவான கட்சி அமைப்பும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் உள்ளனர்... இங்கு விஜய் கூட்டம் நடத்துவது உறுதியானால், அது அரசியல் முக்கியத்துவம் பெறும் கூட்டமாக அமையும்.

அதிலும், சேலத்துக்கு சென்று அதிமுகவை விஜய் விமர்சித்தால், அது இரு கட்சிக்கும் மோதலாக வெடிக்கலாம்.. விஜய் சேலம் கூட்டம் , அதிமுக ஓட்டுக்களை லேசாக அசைக்கலாம்.. அதற்காக எடப்பாடி பழனிசாமியின் கோட்டையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள் அதிமுகவினர்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+