சேலம் சத்யாவின் கள்ளக்காதல்.. காதலனின் ஒரு நிமிட முட்டாள்தனம்.. ஆடிப்போன போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தவர் சத்யா.. இவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். சத்யா வேலை செய்யும் கடையில் மேலாளராக வேலை செய்தவர் சக்திவேல். ஒரே கடையில் வேலை செய்த காரணத்தால் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்தனர். இந்நிலையில் சத்யா சக்திவேலை ஒரு கட்டத்தில் தவிர்த்துள்ளார். இதனால் அடுத்தடுத்து நடந்த சம்பவம் ஆடிப்போக வைத்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (வயது 33). இவருக்கும், காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு மஹிஷா (13) என்ற மகளும், கிஷாந்த் (10) என்ற மகனும் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார், சத்யாவை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சத்யா தனது மகன், மகளுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார்.

What happened due to Salem Sathya s love A Lover s One-Minute Folly

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த சத்யா ஓமலூரில் உள்ள ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அதே கடையில் சேலம் ஜான்சன்பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் (42) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. சக்திவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சத்யா, சக்திவேலுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தாராம். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சக்திவேல், ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய்? என்று சத்யாவிடம் அடிக்கடி பேசி சமரசம் செய்து வந்துள்ளார். இருப்பினும் சத்யா அவருடன் பேசவில்லை.
நேற்று முன்தினம் இரவு சக்திவேல் சத்யாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றார். அப்போது சத்யா வேறு ஒருவரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாராம்.

இதையடுத்து சக்திவேல் சத்யா ஜோடி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சத்யாவை மறைத்து வைத்திந்த கத்தியால் சக்திவேல் தாக்கினாராம். இதை கண்டு தூங்கி கொண்டிருந்த சிறுவன் கிஷாந்த் எழுந்து, ஏன் என் அம்மாவுடன் சண்டை போடுகிறீர்கள், வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என்று தடுத்தாராம், இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல், சிறுவனை கத்தியால் வெட்டிக்கொலை செய்ததுடன், சத்யாவையும் சரமாரியாக வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்

இதனிடையே, வெள்ளாளப்பட்டி அருகே நேற்று காலை சக்திவேல் தான் அணிந்திருந்த பெல்ட் மூலம் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+