திருச்சி டூ சேலம் .. வாடகை வீட்டில் கடலூர் மாணவியிடம்.. பல முறை அத்துமீறிய இளைஞர்.. பாய்ந்த வழக்கு
சேலம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயதுடைய மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். அவரை கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்ற மாணவர், சேலத்திற்கு அழைத்து சென்று வாடகை வீட்டில் தங்க வைத்து அடிக்கடி அத்துமீறியுள்ளார். இந்த அந்த மாணவி தற்போது 2 மாத கர்ப்பமாக உள்ளார்.
18 வயது நிறைவு பெறும் முன்பு படிக்கும் வயதில் காதல் என்பது அந்த சிறுமியின் வாழ்க்கையை மட்டுமல்ல.. காதலிக்கும் மாணவனின் வாழ்க்கையையும் அழித்துவிடுகிறது. 18 வயது நிறைவு பெறும் முன்பு ஒரு பெண்ணின் சம்மதத்துடன் உறவு வைத்தாலும் அது தவறுதான். அவர்கள் மீது பலாத்கார வழக்கு தொடரப்படும். திருமணம், இருவரும் சேர்ந்து வாழ போகிறார்கள் என்கிற சூழல் என்றாலும், கண்டிப்பாக சிக்கல் தான் வரும். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவிக்கு நடந்ததை பார்ப்போம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயதுடைய மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் அங்குள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 22.9.2024 அன்று பெண்கள் விடுதியில் இருந்து வெளியே சென்ற மாணவி திடீரென காணவில்லை. இது குறித்து விடுதி நிர்வாகத்தினர் மாணவியின் தந்தைக்கு அளித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக திருச்சி சென்று அங்குள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி இருந்தார். மேலும் இது குறித்து மாணவியின் தந்தை மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து திருச்சி போலீசார் நடத்திய விசாரணையில், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சீயப்பாடி கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் விஜய்(23) என்பவா் மாணவியை சேலத்துக்கு காரில் அழைத்து சென்று ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்திருப்பது உறுதியானது.
இதையடுத்து திருச்சி போலீசார் சேலத்துக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 14.11.2024 அன்று ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது மாணவி பெற்றோர்களிடம் கூறுகையில், விஜய் தன்னை சேலத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள ஓரு வீட்டில் 2 மாதம் தங்க வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாதாக கூறினார். இதற்கு உடந்தையாக விஜய்யின் தம்பி விஜயராகவன் மற்றும் 2 பேர் இருந்ததாகவும், தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் மாணவி கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த விஜயராகவன் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications