சேலத்தில் அசையாமல் கிடந்த 16 வயது பெண்.. கிட்ட போய் பார்த்தால்? கொடுமை.. தலையிலடித்து கொண்ட அழகாபுரம்
சேலம்: சேலத்தில் இளம்பெண் ஒருவர், ஒட்டுமொத்த மக்களுக்கும் கவலையையும், கலக்கத்தையும் தந்துவிட்டார்.. இதுகுறித்த செய்திதான் இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை அழகாபுரம் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவை காந்திபுரத்தில் கடந்த மாதம் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையோரத்தில், ஒரு பெண் மயங்கிய நிலையில் படுத்துக் கிடந்தார். 25 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார் என்று தெரியவில்லை.. நீண்ட நேரமாகவே அசைவின்றி கிடந்தார்..

போலீசார்: அங்கு ரோந்து பணியில் இருந்த காட்டூர் போலீசாரும், பெண்ணின் போதை நிலையை பார்த்தும்கூட, கண்டுகொள்ளாமல் சென்றனர்.. மதிய நேரத்தில் அந்த பெண் விழுந்து கிடந்ததால், அவர் இறந்து கிடக்கிறாரா? என்றுகூட சிலருக்கு சந்தேகம் கிளம்பியது..
அதுமட்டுமல்ல, அந்த பெண்ணின் உடல் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டிருந்தது. இதைப்பார்த்து மொத்த பேரும் பயந்துவிட்டார்கள்.. அதனால், ஒருசிலர் அந்த பெண்ணின் அருகில் சென்று பார்த்தனர்.. அப்போதுதான், அந்த பெண் காலையிலிருந்தே அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, மதியானம் போதை தலைக்கேறிய நிலையில், இங்கே வந்து சாலையோரம் விழுந்து கிடப்பது தெரியவந்தது.
மதுபோதை: இதை கவனித்த ரோந்து பணியில் இருந்த காட்டூர் போலீசாரும், பெண்ணின் போதை நிலையை அறிந்து, அப்படியே விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். எனினும், காட்டூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் வந்து வரவழைத்தனர்.. அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு போதை தெளியவில்லை.
பொதுமக்களில் ஒருவர், அந்த பெண் போர்த்தியிருந்த துணியை விலக்கினார்.. மதிய நேரம் என்பதால், அவரது கண்களில் வெளிச்சம் சுளீரென பட்டதுமே, அரைகுறை போதையில் எழுந்து உட்கார்ந்தார் அந்த பெண்.. அப்போதுதான், தன்னை சுற்றிலும் இத்தனை பேர் வேடிக்கை பார்ப்பதை அறிந்து, குழப்பத்துடனேயே தட்டுத்தடுமாறி அங்கிருந்து எழுந்து சென்றார்.. இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகியிருந்தது.
16 வயது மாணவி: இப்போது சேலத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. அழகாபுரம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் நேற்று சாயங்காலம் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார்.. +1 படிக்கும் இந்த மாணவிக்கு வெறும் 16 வயதுதான் ஆகிறது.. ரோட்டோரத்தில் இந்த பெண் விழுந்து கிடப்பதை பார்த்ததுமே, பொதுமக்கள் பதறிப்போய்விட்டார்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்த மாணவியின் பெற்றோர் அங்கு விரைந்து வந்தனர். பிறகு அவர்கள், தங்கள் மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
பலாத்காரம்: இதனிடையே அந்த மாணவியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் பரவியது. அதைத்தொடர்ந்து போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், அந்த மாணவி சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்ததும், மது போதையில் அவர் மயங்கி கிடந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, மது போதையில் இருந்த பிளஸ்-1 மாணவியை 2 பேர் பைக்கில் அழைத்து வந்து அழகாபுரம் பகுதியில் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.. அவர்கள் யார்? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
நண்பர்கள்: ஆனால், அந்த மாணவி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினாரா? அல்லது யாராவது அவருக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். டாக்டர்கள் பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றனர்.
பெண்கள் கட்டுக்கடங்காத மதுபோதையில், தமிழ்நாட்டின் சாலைகளில் இப்படி விழுந்து கிடப்பது, பொதுமக்களுக்கு கவலையையும், வருத்தத்தையும், துயரத்தையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications