நிர்வாணமாக கிணற்றில் மிதந்த அசோகனின் 2ஆவது மனைவியின் சடலம்.. சினிமா ரேஞ்சுக்கு சேலத்தில் பகீர்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சொத்து தகராறில் மனைவியின் அண்ணியை கொலை செய்துவிட்டு நிர்வாணமாக்கி கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி தெருவைச் சேர்ந்தவர் அசோகன் (43). இவருக்கு விஜயா, செல்வராணி என இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி குழந்தைகள் இல்லாததால் 16 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராணியை திருமணம் செய்து கொண்டார் அசோகன்.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி அன்று அசோகனுக்கும் செல்வராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அன்று இரவே செல்வராணியை காணவில்லை என உறவினர்கள் பல்வேறு ஊர்களில் தேடினர்.

 செல்வராணி கிடைக்கவில்லை

செல்வராணி கிடைக்கவில்லை

ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து தேடி தேடி செல்வராணி காணாததால் போலீஸாரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் அசோகனின் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு கிணற்றில் பெண்ணின் சடலம் இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் போய் விசாரணை நடத்தினர்.

 நிர்வாணமாக

நிர்வாணமாக

அப்போது நிர்வாணமாக கை, கால்கள் கட்டப்பட்டு இருந்த அந்த பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். அப்போது அந்த இடத்திற்கு வந்த அசோகன், அந்த சடலத்தை செல்வராணி என அடையாளம் காட்டினார். மேலும் ஏற்கெனவே சடலம் மிதந்த போது அடையாளம் காட்டாததால் அசோகன் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

 3 தனிப்படைகள்

3 தனிப்படைகள்

இதையடுத்து செல்வராணி மரணம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. செல்வராணியின் செல்போன் அழைப்புகள் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் அசோகனின் சகோதரியின் கணவரின் மொபைல் எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 விஏஓவிடம் சரண்

விஏஓவிடம் சரண்

இதையடுத்து அசோகனின் சகோதரியின் கணவர் சிவராஜ் தானாகவே வெள்ளையூர் விஏஓவிடம் சரணடைந்தார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை பகீர் தகவல் கிடைத்தது. தனது மனைவி குடும்பத்தில் உள்ள பூர்வீக சொத்தை அவரது அண்ணன் அசோகன் தனது இரண்டு மனைவிகளுக்கு மட்டும் எழுதி வைத்தார்.

 ஆத்திரத்தில் தகராறு

ஆத்திரத்தில் தகராறு

இதனால் ஆத்திரத்தில் இருந்த சிவராஜ், செல்வராணியை வழியில் பார்த்துள்ளார். அப்போது அவரை வழிமறித்து சிவராஜ் சொத்து குறித்து பேசியுள்ளார். அப்போது செல்வராணி, சிவராஜை ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவராஜ் அங்கிருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் தாக்கியுள்ளார். இதில் மயங்கிய செல்வராணி இறந்தார்.

 கைது செய்யப்பட்ட கொலையாளி

கைது செய்யப்பட்ட கொலையாளி

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவராஜ், செல்வராணியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக நம்ப வைப்பதற்காக அவரை நிர்வாணமாக்கி, கை, கால்களை கட்டி கிணற்றில் வீசிவிட்டு தப்பி விட்டார். இந்த நிலையில் போலீஸார் கொலையாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில் சரணடைந்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+