ஏற்காடு காபி தோட்டத்தில் உல்லாசம்.. 300 அடி பள்ளத்தில் காதலி.. தானாகவே பொறியில் சிக்கிய சேலம் காதலன்
சேலம்: சேலம் ஏற்காட்டில் காணாமல் போன சுமதி என்ற பெண்ணை, கள்ளக்காதலன் வெங்கடேஷால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது,., இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று 600 அடி பள்ளத்தில் தூக்கி வீசியது ஏன்? என கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கொலையாளியை போலீசார் எப்படி வலைவீசி பிடித்தனர் என்பது குறித்தும் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாரமங்கலம் மலைக்கிராமத்தை சேர்ந்த சுமதி என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானவர் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ். கார் டிரைவரான சுமதியின் கணவர், அடிக்கடி வெளியூர் சென்றுவிடும் சூழலில், இவர்களுக்குள் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

அந்த பகுதியிலேயே சுமார் அரை ஏக்கருக்கு காபி தோட்டம் வைத்துள்ள வெங்கடேஷ், தனது தோட்டத்திற்கு சுமதியை அடிக்கடி வரவழைத்து, கடந்த ஒரு வருட காலமாகவே உல்லாசமாக இருந்து வந்துள்ளார்...
ஆனால், ஒரு மாத காலமாக சுமதி, வெங்கடேசனின் போனை தவிர்த்து வந்ததுடன், இன்ஸ்டாவிலும் போனை லாக் செய்துவிட்டார்.. தன்னை அவாய்டு செய்துவிட்ட பேறு யாருடனாவது பழகுகிறாயா? என்று சுமதியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார் வெங்கடேஷ். அப்போது ஏற்பட்ட தகராறில், துப்பட்டாவில் சுமதியின் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டார். பிறகு சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி, 600 அடி பள்ளத்தில் வீசி உள்ளார்.. இந்த சம்பவத்தில் வெளியான கூடுதல் தகவல்கள் இதோ:
1. கள்ளக்காதல் ஜோடி உல்லாசம்
வெங்கடேசுக்கு சந்தேகம் அதிகரித்த நிலையில், சம்பவத்தன்று சுமதியை காபி தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார்.. அங்கே இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அதன் பிறகு போனுக்கு ஏன் லாக் போட்டுள்ளாய்? என்று கேட்டு வெங்கடேஷ் தகராறு செய்துள்ளார்.. அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேஷ், துப்பட்டாவால் சுமதியின் கழுத்தை இறுக்கி கொன்றதுடன், அவரது கழுத்தில் போட்டிருந்த தங்க தாலியை மட்டும் கழற்றி எடுத்துள்ளார்..
2. காப்பி கட்டும் சாக்குப்பை
சடலத்தை மறைக்க வெங்கடேஷ் பெரும் முயற்சி எடுத்துள்ளார்.. காபி கொட்டை கட்டும் சாக்குப்பையில் சடலத்தை கட்டி, தன்னுடைய பைக்கில் ஏற்றிக்கொண்டு, ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு வழியாக குப்பனூர் சாலையில் 6 கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளார். அங்கு முனியப்பன் கோயில் அருகில் உள்ள பெரிய பள்ளத்தின் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு, சாக்கு மூட்டையை எடுத்து கொண்டு, பள்ளத்தில் சிறிது தூரம் இறங்கி, அதன் பிறகே வீசியுள்ளார். அந்த பள்ளத்தின் அடி 600 அடியாகும்.
3. மளிகைக்கடைக்காரர்
இந்த சம்பவம் நடந்தது கடந்த 23ம் தேதி. மனைவியை காணாமல், சுமதி கணவர் போலீசார் புகார் கொடுத்து, தேடும் படலம் நடந்துள்ளது. 26ம் தேதியன்று மாரமங்கலம் மலைக்கிராமத்திற்கு வந்த ஒரு பஸ் டிரைவர், ஒரு பார்சலை அங்கிருந்த மளிகைக்கடையில் தந்து, சண்முகம் என்பவரிடம் கொடுத்துவிடும்படி சொல்லி உள்ளார். அந்த மளிகைக்கடைக்காரர் சண்முகத்திடம் பார்சலை தந்துள்ளார். அதனை திறந்து பார்த்தபோதுதான், சுமதியின் தாலி தாலி இருந்துள்ளது.
4. சிக்கிய வெங்கடேஷ்
டிரைவர் எதற்காக மளிகைக்கடைக்காரிடம் பார்சலை தர வேண்டும்? என்று விசாரித்தபோதுதான் கள்ளக்காதலன் வெங்கடேஷ் பெயர் அடிபட்டது.. இதனால் வெங்கடேஷிடமே சென்று, என் மனைவி தாலி உன்னிடம் எப்படி வந்தது? என்று கேட்டுள்ளார் சண்முகம்.
அதற்கு வெங்கடேஷ், "தாலியை கழற்றி என்னிடம் கொடுத்துவிட்டு, என் கணவருடன் வாழ முடியாது என்று சொல்லி, எங்கோ போய்விட்டார்.. எங்கே போனார் என்று தெரியாது" என்றாராம். ஆனால், வெங்கடேஷ் இப்படி உளறி கொட்டியதுதான் சண்முகத்துக்கு சந்தேகம் அதிகரித்து போலீசுக்கு சென்று, தன் சந்தேகத்தை சொல்லி உள்ளார். இப்படித்தான் வெங்கடேஷ் போலீசில் சிக்கி உள்ளார்.
5. பரபரப்பு வாக்குமூலம்
சுமதி மீது உயிரையே வைத்திருந்தாராம் வெங்கடேஷ்.. இந்த ஒரு வருட கால உறவில், சுமதிக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருக்கிறாராம். ஆனால், வேறு ஆண்களுடன் போனில் பேசியது ஆத்திரத்தை தந்ததால்தான் கொலை செய்தேன்" என்று பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications