Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'உறவு'க்கு அழைத்து டார்ச்சர் செய்த கணவன்.. கள்ளக்காதலனுக்காக மனைவி செய்த துணிகரம்.. சங்ககிரி ஷாக்

பாலில் விஷம் கலந்து தந்து கணவனை கொன்ற மனைவி கைதானார்

Subscribe to Oneindia Tamil

சேலம்: நேற்று முன்தினம் சங்ககிரி அருகே இளைஞர் ஒருவர் நள்ளிரவில் மர்மமானது தொடர்பாக அவரது மனைவியையும், கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. முன்னதாக, போலீசாரிடம் கள்ளஜோடி இருவரும் பரபரப்பு வாக்குமூலத்தையும் தந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே புல்லாக்கவுண்டம்பட்டி என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் தயானந்த்... 31 வயதாகிறது.. இவரது மனைவி அன்னப்பிரியா.. 21 வயதாகிறது.. சேலத்தை சேர்ந்தவர்.. இவர்களுக்கு திருமணம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது.

2 வயதில் ஆண் குழந்தை இந்த தம்பதிக்கு உள்ளது... நிதிநிறுவனம் ஒன்றை சொந்தமாகவே தயானந்த் நடத்தி வந்தார்.. அத்துடன் கார்கள், மினி டெம்போக்களையும் வாடகைக்கு விட்டுள்ளார்.

 வலிப்பு நோய்

வலிப்பு நோய்

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கமான பணிகளை முடித்து கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார் தயானந்த்.. அப்போது நடுராத்திரி சொந்தக்காரர்களுக்கு திடீரென அன்னப்பிரியா போன் செய்துள்ளார்.. தயானந்தத்திற்கு வலிப்பு வந்து, கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகவும், அதனால் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டுவதாகவும் பதறியபடியே சொல்லி உள்ளார்..

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனால் உறவினர்களும் வீட்டிற்கு வந்துள்ளனர்.. ஆனால், அதற்குள் ரத்த வெள்ளத்தில் தயானந்த் உயிரிழந்து கிடந்தார்... இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தேவூர் போலீசுக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்தனர்... சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணயை நேற்று காலை ஆரம்பித்தனர்.

 அடித்து கொலை

அடித்து கொலை

ஆனால், நீண்ட நேரமாக இந்த மரணத்தில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.. உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்தனர்.. அக்கம்பக்கத்தினரிடமும் விசாரித்தபோதுதான், ஒருவேளை தயானந்தை அவரது மனைவியே அடித்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமாக கூறியுள்ளனர்.. இதன் அடிப்படையில் போலீசார் அன்னப்பிரியாவிடம் விசாரணையை ஆரம்பித்தனர்..

 கள்ளக்காதலன்

கள்ளக்காதலன்

அப்போது தன்னுடைய கள்ளக்காதலனுக்காக இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் தந்துள்ளார் அன்னிபிரியா. கள்ளக்காதலன் முகேஷை போலீசார் கைது செய்து அவரிடம் தனியாக விசாரித்தனர்... முகேஷ் சொன்னதாவது: "தயானந்தனின் உறவுக்கார பெண் ஒருவரிடம், என்னுடைய அப்பா எங்களது சொத்தை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார்... அந்த கடனுக்கான வட்டியை கொடுப்பதற்காக தயானந்தனின் வீட்டுக்கு ஒவ்வொரு மாதமும் செல்வேன்...

 ரகசிய உறவு

ரகசிய உறவு

அப்போதுதான் அன்னப்பிரியாவுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் செல்போனில் பேசி, எங்கள் உறவை வளர்த்தோம்.. யாரும் இல்லாத நேரம் அன்னப்பிரியா வீட்டுக்கு செல்வேன்.. இருவரும் ஜாலியாக இருப்போம்.. ஒருநாள் இதை தயானந்தன் பார்த்து விட்டார்... எங்களை கண்டித்தார்...

 பாலில் விஷம்

பாலில் விஷம்

அன்னப்பிரியாவை அடிக்கடி உறவுக்கு அழைத்து டார்ச்சர் தந்துள்ளார்.. இதனை அன்னப்பிரியா என்னிடம் சொல்லி அழுவார், நானும் ஆறுதல் கூறுவேன். ஒருகட்டத்தில் நாங்கள் 2 பேரும் திருமணம் செய்ய முடிவெடுத்தோம்.. தயானந்தன் உயிருடன் இருந்தால் இது நடக்காது என்பதால் கொலை செய்ய திட்டம் போட்டோம்.. சம்பவத்தன்று, அவருக்கு பாலில் விஷம் கலந்து அன்னப்பிரியா தந்தாள்.. அவர் அதை குடித்து மயங்கி விழுந்ததும், எனக்கு போன் செய்தார்.. உடனே அங்கு சென்ற நான், கட்டையால் தயானந்த் மண்டையில் அடித்து கொன்றுவிட்டோம்" என்றார்.

 பரபரப்பு

பரபரப்பு

முகேஷை போலீஸ் விசாரிக்கும்போது, தயானந்தன் வசித்து வந்த பகுதி மக்கள் ஸ்டேஷன் முன்பு திரண்டுவிட்டனர்.. கொலையாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி கோஷங்களையும் எழுப்பினர்... இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது... அவர்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். விசாரணையின் இறுதியில், தயானந்தனை கொலை செய்தது எப்படி என்பது குறித்து அன்னப்பிரியாவும், முகேஷூம் போலீசாரிடம் நடித்து காட்டினர்... பின்னர் 2 பேருக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு, சங்ககிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்... அன்னப்பிரியா இப்போது சேலம் ஜெயிலில் உள்ளார்.. முகேஷ் ஆத்தூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+