எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி பிரதமருக்கு நன்றி சொன்ன ’அதிமுக பொதுச் செயலாளர்’ சசிகலா
மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்ப பெற்றதற்கு சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் நன்றி தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார் அவரது அறிக்கையில் ஓராண்டு போராடிய விவசாயிகளின் நிலை அறிந்து பிரதமர் சட்டத்தை வாபஸ் பெற்றதை மனதார வரவேற்பதாகவும், விவசாயிகளின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று, உயிரிலிருந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
மூன்று வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்ற நம் பாரத பிரதமருக்கு தமிழக மக்களின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றிகள். நம் இந்திய பிரதமர் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறிப்பாக அனைத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எந்தவித அரசியல் கவுரவம் பார்க்காமல் பெருந்தன்மையோடு 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது தமிழக மக்களின் சார்பாக முதற்கண் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக விவசாயிகளும் பிற மாநிலங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கடந்த ஒரு வருட காலமாக போராடினார்கள். இந்த போராட்டத்தில் எவ்வித சாதி, மத பேதமில்லாமல் மொழி வேறுபாடின்றி ஒருமித்த கருத்தோடு ஒன்றிணைந்து போராடிய விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு இருப்பது உண்மையிலேயே மிகவும் வரவேற்கப்பட வேண்டியதாகும். எங்கள் ஆசான் புரட்சித்தலைவர் பாடிய

"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளது போன்று
"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில், உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்"
என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கு வடிவம் கொடுக்கும் விதமாக உலக நாடுகள் எல்லாம் திரும்பிப் பார்க்கும் வகையில் நம் இந்தியத் திருநாட்டில் வேளாண்மையில் புதிய புரட்சி ஏற்பட்டு விரைவில் வல்லரசாகும் என்பது உறுதி.
நம் தலைவி ஜெயலலிதாவும் இதே கொள்கையை மனதில் வைத்து விவசாயிகளின் உரிமைகளுக்காக தன் இறுதி மூச்சு வரை போராடினார் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும் விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி விவசாயத் துறையில் நிலவும் இடர்பாடுகள் களையப்படும் என்று நம் பிரதமர் குறிப்பிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
அதே சமயம் கடந்த ஓராண்டாக நடைபெற்ற போராட்டங்களில் தங்கள் இன்னுயிரை நீத்த அனைத்து விவசாயிகள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இந்த தீபத்திருநாளில் விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றிய நம் பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அம்மா வழியில்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் சசிகலா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.2 ஒரே கல்லில் 2 மாங்காய்.. 3 வேளாண் சட்டங்களை மோடி அரசு வாபஸ் பெற்ற பரபர பின்னணி!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications