சிங்கப்பூர் ஏர்போர்டில் பரபரப்பு.. கூண்டில் இருந்து எஸ்கேப் ஆன சிங்கங்கள்.. அடுத்து நடந்தது என்ன
சிங்கப்பூர்: சிங்கப்பூர் விமான நிலையத்தில் இரண்டு சிங்கங்கள் தாங்கள் கொண்டு வரப்பட்ட கூண்டுகளில் இருந்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
பொதுவாக ஒரு நாட்டில் இருக்கும் வனவிலங்குகள் மற்ற நாடுகளில் இருக்கும் வனவிலங்கு பூங்காக்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் சகஜமான ஒரு நிகழ்வு தான்.
சீனா உலகெங்கும் தனது நட்பு நாடுகளுக்கு பான்டா கரடிகளை அனுப்பியுள்ளன. இப்படி அனுப்பும் போது வெகு ஜாக்கிரதையாகவே விலங்குகளை அனுப்புவார்கள்.

வனவிலங்குகள்
விமானம் மற்றும் கப்பல்களில் கூண்டுகளில் அடைக்கப்பட்டு, தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் உடனேயே விலங்குகள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். அதேபோல இப்படி நீண்ட தூரம் எடுத்துச் செல்லும்போது, விலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தகுந்த மருத்துவ ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும்.

எஸ்கேப் ஆன சிங்கங்கள்
இந்தச் சூழலில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் 2 சிங்கங்கள் கண்டெய்னர் கூண்டில் இருந்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்குள்ள அதிகாரிகள் சிங்கங்களுக்கு மயக்க ஊசியைச் செலுத்தினர். மயக்கத்தில் உள்ள சிங்கங்கள் மாண்டாய் வனவிலங்கு மையத்தின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்குக் கொண்டு செல்லப்பட்டன
இந்த சிங்கங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன அல்லது அவை எங்குக் கொண்டு செல்லப்பட இருந்தன என்பது குறித்த தெளிவாகத் தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குத் தான் இந்த சிங்கங்களை எடுத்துச் செல்லும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த 7 சிங்கங்களில் தொகுப்பில் இருந்தே இந்த 2 சிங்கங்களும் எஸ்கேப் ஆகியுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
நல்வாய்ப்பாக 2 சிங்கங்கள் மட்டுமே எஸ்கேப் ஆனது. 7 சிங்கங்களும் தப்பியிருந்தால் விமான நிலையத்திலேயே பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். தப்பிய 2 சிங்கங்களில் அதன் கூண்டின் மேலேயே படுத்திருந்தது. இருப்பினும் சிங்கம் கூண்டில் இருந்து தப்பியிருந்தாலும் கூட, முழு நேரமும் அவை கண்டெய்னரை சுற்றிப் பொருத்தப்பட்ட பாதுகாப்பு வலைக்குள் இருந்தன என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் விமானச் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை.

உடல்நிலை கண்காணிப்பு
இது தொடர்பாகச் சிங்கப்பூர் ஏர்னலைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த சம்பவத்தில் சிங்கங்களின் உடல்நலன் தான் எங்களுக்கு முக்கியம். மாண்டாய் வனவிலங்கு குழுவுடன் இணைந்து சிங்கங்களில் உடல்நிலையைக் கண்காணித்து வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல வனவிலங்கு அமைப்பு கூறுகையில், "சிங்கங்களுக்கு இப்போது மயக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளது. மாண்டாய் விலங்கு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குச் சிங்கங்களின் நலன் கண்காணிக்கப்படும். இது தொடர்பாகச் சிங்கப்பூர் ஏர்னலைன்ஸ் உடன் நாங்கள் தொடர்பிலேயே உள்ளோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

முதல்முறை இல்லை
வனவிலங்குகள் தங்கள் கூண்டுகளில் இருந்து தப்பிப்பது இது முதல்முறை இல்லை. கடந்த 2005 ஆம் ஆண்டில், ஏஞ்சல் என்ற ஜாகுவார், இறைச்சியைப் போடும் சிறிய துளை வழியாகத் தப்பித்து. இதனால் உயிரியல் பூங்காவில் இருந்த 500க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சுமார் 30 நிமிடங்கள் கழித்து அந்த ஜாக்குவார் மீண்டும் பிடிக்கப்பட்டது. அதேபோல 2019இல் லிம் சு காங் பண்ணையில் இருந்து தப்பிய ஒரு காளை 14 மணி நேரம் வெளியே சுற்றிக் கொண்டிருந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications