சிங்கப்பூரில் மின்னல் வேகத்தில் தாக்கும் கொரோனா- நேற்று ஒரே நாளில் மேலும் 334 பேருக்கு பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் தாக்கம் சிங்கப்பூரில் படுவேகமாக அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் மேலும் 334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,252 ஆக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா படுவேகமாக தாக்கி வருகிறது. வெளிநாட்டினர் தங்கி இருக்கும் இடங்களில் கொரோனா அதிக அளவில் பரவுகிறது.

334 new coronavirus cases in Singapore

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 3,252 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 189 பேர் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதித்த இடங்களுடன் தொடர்புடையவர்கள்; 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

334 new coronavirus cases in Singapore

அதேநேரத்தில் 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இடங்கள், நபர்களுடன் எந்தவித தொடர்புமே இல்லாதவர்களாம். இந்த 122 பேரில் 24 பேர் மட்டுமே சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். எஞ்சிய 98 பேர் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டினர்.

சிங்கப்பூரில் பலி 10

இதனிடையே சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனாவால் நேற்று மரணடைந்தார். கடந்த 1 மாதமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+