ரூ.3.6 லட்சம் கொடுத்து ஏமாந்த இந்திய இளைஞர்.. சிங்கப்பூருக்கு வேலை தேடி போறீங்களா? உஷார்!
சிங்கப்பூர்: வேலைக்காக இந்தியர்கள் பலரும் சிங்கப்பூருக்கு செல்வது வழக்கம்தான். ஆனால், சமீபத்தில் ரூ.3.6 லட்சம் பணம் கொடுத்து சிங்கப்பூர் சென்ற இளைஞரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூருக்குப் பணி விசாவில் சென்ற 30 வயது இந்திய இளைஞரை, போலியான பணி விசா மற்றும் நியமனக் கடிதத்துடன் வந்ததாகக் கூறி, குடிவரவு அதிகாரிகள் கைது செய்து திருப்பி அனுப்பியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை என்று நம்பி, அந்த நபர் ₹3.6 லட்சம் பணம் செலுத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து விசா மற்றும் பணி நியமனக் கடிதத்தைப் பெற்றதாக அவர் கூறினார். ஆனால், சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரது ஆவணங்களில் உள்ள குறைபாடுகளைக் குடிவரவு அதிகாரிகள் கண்டறிந்தனர். விசா போலியானது என்பதையும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனம் உண்மையில் இல்லை என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவருக்குச் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, மறுநாள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்தியா திரும்பியதும், அந்த இளைஞர் உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலை மோசடி தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகளைப் பரிசீலித்து, இந்த மோசடிக்குப் பின்னால் உள்ளவர்களைக் கண்டறிய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
விசா மோசடியைக் கண்டறிந்து தடுப்பது எப்படி?
வெளிநாடுகளில் வேலை தேடுபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஒவ்வொரு படியையும் சரிபார்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் மற்றும் குடிவரவு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மோசடிகளைக் கண்டறிவதற்கு சில முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிந்துக்கொள்ளுவது அவசியம்.
நிறுவனத்தை நன்கு ஆய்வு செய்யுங்கள்: முகவர்கள் அனுப்பும் ஆவணங்களை அப்படியே நம்பிவிடாதீர்கள். ஒரு நிறுவனம் அதற்குரிய அதிகாரப்பூர்வ வலைத்தளம், சரிபார்க்கக் கூடிய தொடர்பு விவரங்கள், சம்பந்தப்பட்ட நாட்டின் கார்ப்பரேட் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதா, அல்லது நேரடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய பொதுத் தொலைபேசி எண்கள்/மின்னஞ்சல் முகவரிகள் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். நிறுவனத்தை தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியாவிட்டால், அதை ஓர் எச்சரிக்கை அறிகுறியாகக் கருதுங்கள்.
விசா நடைமுறைகளை அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தவும்
ஒவ்வொரு நாடும் தங்களது விசா விதிகளை அதிகாரப்பூர்வ குடிவரவு இணையதளங்கள் மூலம் வெளியிடுகின்றன. எனவே, எப்போதும் அரசு குடிவரவு வலைத்தளத்தைச் சரிபார்த்து, விசா வகை வேலைக்கு ஏற்றதாக உள்ளதா, செல்லுபடியாகும் விசாவா என்பதை உறுதிப்படுத்தவும். முறையான விண்ணப்ப செயல்முறை இல்லாமல் எந்த ஒரு விசா வழங்கப்படாது.
முன்கூட்டியே பணத்தை செலுத்துவதில் கவனமாக இருங்கள்
'உத்தரவாதமான' வேலைகள், விரைவான விசாக்கள் அல்லது வெளிநாட்டுப் பணி அமர்வுகளுக்காகப் பெரிய தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று கேட்டால் உடனே உஷாராகிவிடுகங்கள். சில வேலைவாய்ப்பு முகவர்கள் சேவைக்கட்டணங்களை வசூலித்தாலும், கட்டணங்கள் சரியான ரசீதுகள் மற்றும் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளதா, பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு செல்கிறதா, ஆவணங்கள் இல்லாமல் பணமாகக் கேட்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
ஆவணங்களை கவனமாகப் பரிசோதிக்கவும்
போலியான விசாக்கள் மற்றும் பணி நியமனக் கடிதங்களில் பெரும்பாலும் எழுத்து பிழைகள், தவறான லோகோக்கள், மோசமான வடிவம், அதிகாரப்பூர்வ குறிப்பு எண்கள் இல்லாமை மற்றும் பிற சிறிய விவரங்கள் இருக்கும். எதையேனும் சந்தேகமாக உணர்ந்தால், பயணத்திற்கு முன் மீண்டும் சரிபார்க்கவும், செல்ல வேண்டிய நாட்டின் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தை நாடவும்.
அவசரப்படுத்துவார்கள் உஷாராக இருங்கள்
போலி விசாக்களில் முக்கியமானது, அவசரப்படுத்த வைப்பது. மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் குறைந்த கால அவகாசம் அல்லது உடனடி காலக்கெடுவைக் கூறி அவசர நிலையை ஏற்படுத்துவார்கள். நியாயமான முதலாளிகள் ஒருபோதும் இப்படி செயல்பட மாட்டார்கள் என்பதையும், விண்ணப்பதாரர்கள் சரிபார்ப்புக்குத் தேவையான நியாயமான கால அவகாசத்தை அனுமதிப்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications