Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியர்களே ரெடியா? இறுதியான மிக முக்கியமான ஒப்பந்தம்.. இனிமேல் சிங்கப்பூர் போவது ரொம்ப ஈஸி

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: இந்தியா சிங்கப்பூர் இடையேயான விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுக்க பல்வேறு மெட்ரோ நகரங்களில் இருந்தும் சிங்கப்பூர் செல்வோர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இப்போது மிக முக்கியமான ஒரு ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பயணத்தை மொத்தமாக மாற்றும்!

தெற்காசிய நாடுகளில் முக்கியமானது சிங்கப்பூர். பரப்பளவு அடிப்படையில் சிறிய நாடு என்றாலும் கூட உலக பொருளாதாரத்தில் சிங்கப்பூருக்கு முக்கிய இடம் இருக்கவே செய்கிறது. மேலும், இந்தியாவில் இருந்து கணிசமான அளவுக்குச் சிங்கப்பூரில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதனால் இந்தியா சிங்கப்பூர் இடையேயான விமானப் போக்குவரத்து முக்கியமானதாக இருக்கிறது.

India-Singapore Travel Easier New Airline Partnership will now provide a seamless travel experience

சிங்கப்பூர் விமான பயணம்

இதற்கிடையே இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமானப் பயணத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஏர்லைனான ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இது தொடர்பாக முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான விமானப் பயண பார்ட்னர்ஷிப்பில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இந்தியா சிங்கப்பூர் இடையேயான பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மாற்றம்

இந்த புதிய கட்டமைப்பு ஒப்பந்தத்தின்படி, கோட்ஷேர், லாயல்டி திட்டங்கள் மற்றும் கார்ப்பரேட் பயணச் சேவைகள் உள்ளிட்டவற்றில் ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான விமான ஆப்ஷன்களை கொடுக்கும் வகையில் இரு நிறுவனங்களும் இணைந்து தங்களுக்கான அட்டவணையைத் தயார் செய்யும்.

இது இந்தியா - சிங்கப்பூர் இடையேயான பயணத்தை எளிதாக்குகிறது. அதிலும் குறிப்பாக பிஸ்னஸ் கிளாஸில் பயணிப்போருக்கு இது பல்வேறு வகைகளில் நன்மையைக் கொடுக்கும். இதன் மூலம் இரு நாடுகளில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கும் சேவை மேம்படுத்தப்படும்.

குறைந்த ரேட்டில் டிக்கெட்

ஏற்கனவே ஏற் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன் நிறுவனங்கள் பல விஷயங்களில் இணைந்து செயல்படும் நிலையில், இந்த ஒப்பந்தம் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் இருந்து சிங்கப்பூர் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் தேவையை இது பூர்த்தி செய்யும். இந்தப் புதிய கூட்டணி மூலம், பயணிகள் அதிக இருக்கை வசதியையும், குறைந்த விலையில் டிக்கெட்களையும் பெறலாம் எதிர்பார்க்கலாம்.

இந்தியச் சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் சிங்கப்பூர் செல்வது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சிங்கப்பூர் விசா

சிங்கப்பூர் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் விசா கோரி விண்ணப்பிக்கப் பயணத் தேதியிலிருந்து குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் தேவை. மேலும், அதில் குறைந்தபட்சம் 2 பக்கங்கள் காலியாக இருப்பதும் அவசியம். பூர்த்தி செய்து கையொப்பமிடப்பட்ட 14A படிவம் மற்றும் 35mm x 45mm அளவிலான வெள்ளை பேக் கிரவுண்ட் கொண்ட போட்டோவும் தேவை.

அத்தோடு கன்பார்ம் செய்யப்பட்ட ரிட்டர்ன் விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் முன்பதிவையும் அவசியம் இணைக்க வேண்டும். மேலும், கடந்த 6 மாத வங்கி அறிக்கையையும் காட்ட வேண்டி இருக்கலாம். விசா கோரி விண்ணப்பிக்கும்போது 30 சிங்கப்பூர் டாலர், சுமார் ரூ.2100 கட்டணம் செலுத்த வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+