இந்தியாவுல வொர்க் கல்சர் ரொம்ப மோசம்.. சிங்கப்பூரை பாருங்க.. புலம் பெயர் இந்தியர் பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: இந்தியாவில் வேலை கலாச்சாரம் ரொம்பவும் டாக்சிக்கா மாறி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, வேலை நேரத்தை தாண்டி உட்கார சொல்வது, லீவு கேட்டால் பாதி சொத்தையே கேட்டதை போல முகம் சுழிப்பது போன்றவை இந்திய வேலை கலாச்சாரத்தில் இயல்பானதாக மாறியிருக்கிறது. இந்நிலையில், புலம் பெயர் இந்தியர் ஒருவர், சிங்கப்பூரில் வேலை கலாச்சாரம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது? என்பதை பகிர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் பணியாற்றியபோது விடுமுறை எடுக்க சிரமப்பட்டதாகவும், தற்போது ஆரோக்கியமான பணிச்சூழலை அனுபவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அலுவலக நேரம் முடிந்த பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

job jobs india

அமன் என்ற அந்த நபர், இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில், சிங்கப்பூரில் உள்ள தனது அலுவலகக் காட்சிகளைக் காட்டியபடி, இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பணி கலாச்சார வேறுபாடுகளை விவரித்து தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீடியோவில் அவர் கூறுகையில், "இந்தியாவில் விடுமுறை கேட்பதற்கு கெஞ்ச வேண்டியிருந்தது. சார், உடம்பு சரியில்லை, குடும்பத்தில் அவசர வேலை' இப்படி வெள்ளிக்கிழமை விடுமுறை கிடைப்பதற்காகவே நாம் ஏதாவது ஒரு சோகமான கதையை உருவாக்க வேண்டியிருந்தது.

ஆனால் இங்கே சிங்கப்பூரில், நான் அனுமதி கேட்பதில்லை, வெறும் தகவலை மட்டும் சொல்கிறேன். மாலை 6 மணிக்கு மேல் என் போன் எனக்குத்தான் சொந்தம், என் முதலாளிக்கு அல்ல. போன் கால் இல்லை, குற்ற உணர்வு இல்லை, நிம்மதியான வாழ்க்கை இருக்கிறது.

ஒருவேளை நீங்கள் இரவு 8 மணிக்கு மேல் அலுவலகத்தில் அமர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் கடின உழைப்பாளி கிடையாது நண்பா, நீங்கள் வெறும் சுரண்டப்படுகிறீர்கள் அவ்வளவுதான்" என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனது மனப்பான்மையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாக இதை அமன் விவரிக்கிறார். "சிங்கப்பூருக்கு வந்த பிறகு எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிந்தனை மாற்றம் இதுதான். உங்கள் ஓய்வு நேரத்தை விட்டுக்கொடுப்பதை நிறுத்துங்கள். டாக்சிக் பணி கலாச்சாரங்களில், நீங்கள் ஏன் வேலை செய்யவில்லை என்பதை விளக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அனுதாபத்தை அல்லது அங்கீகாரத்தைப் பெறுவதற்காக விவரங்களை அதிகமாகப் பகிர்வீர்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பணி சூழல் குறித்து எதிர்ப்பு தெரிவிப்பது இவர் மட்டும் கிடையாது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய பணி சூழல் குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் இப்படி மாடு மாதிரி உழைத்தாலும், பொருளாதாரம் அந்த அளவுக்கு கிடைப்பது கிடையாது. மாறாக வேலை வாங்குபவர்கள் கொழுத்து வளர்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அமன் வீடியோ குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பலரும், GenZ தலைமுறையினர் இந்த சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+