Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாம்லாவிடம் இருந்த ஒரே கெட்ட பழக்கம்.. ரூ.2 லட்சம் அபராதம் விதித்த சிங்கப்பூர்! ரொம்ப ஸ்ட்ரிக்ட்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: பொதுவாகவே சிங்கப்பூர் நாட்டில் மிகக் கடுமையான விதிகள் பின்பற்றப்படும். நீங்கள் சிறிய விதிமீறலில் ஈடுபட்டாலும் கூட பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும். அப்படித் தான் அங்கு 71 வயதான பெண் ஒருவர் ஒரு சிறிய தவற்றுக்காக சுமார் 2 லட்சம் அபராதம் செலுத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

தென்கிழக்கு நாடுகளில் முக்கியமானது சிங்கப்பூர். இது குட்டி நகரம் என்றாலும் சர்வதேச அளவில் மிகவும் முக்கியமானது. இதனால் அங்குப் பல கடுமையான விதிகள் எப்போதும் அமலில் இருக்கும். சிறிய தவறுக்கும் கடும் தண்டனை விதிக்கப்படும். அப்படித் தான் அங்கு ஒரு பெண் சிக்கலில் மாட்டியுள்ளார்.

Singapore Bizarre rules 71 year old Woman has Fined 2 Lakh for repeatedly feeding wild birds

என்ன நடந்தது

சிங்கப்பூரைச் சேர்ந்த 71 வயதான சண்முகநாதன் ஷாம்லா என்ற பெண், பறவைகளுக்குத் தொடர்ந்து உணவளித்து வந்துள்ளார். ஆனால், சிங்கப்பூர் நாட்டின் விதிகளின்படி இது குற்றமாம். இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் என்றால் ஏதோ சின்ன தொகை என நினைத்துவிட வேண்டாம். சுமார் 3,200 சிங்கப்பூர் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,27,845 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. வனவிலங்குச் சட்டத்தின் கீழ் 4 முறை விதிகளை மீறியதை அவர் ஒப்புக்கொண்டார். நீதிமன்றம் இவரது அனைத்து விதிமீறல்களையும் கருத்தில் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதேநேரம் ஷாம்லா இதுபோன்ற சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதம், இதே குற்றத்திற்காகவும், பறவைகள் பிடிக்கும் போது இடையூறு ஏற்படுத்தியதற்காகவும் அவருக்கு 1,200 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான ஷாம்லா இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தார். இருப்பினும், ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மீண்டும் ஜூன் மாதம் அதே விதிமீறலுக்குச் சிக்கினார்.

நீதிமன்றம்

அவர் கடந்த ஜூலை 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில், ஒன்பது முறை புறாக்களுக்குத் தானியம் மற்றும் ரொட்டி வழங்கியுள்ளார். டோவா பயோ (Toa Payoh) பகுதியில் அவர் வசித்து வருகிறார். அங்கு அவரது வீட்டைச் சுற்றிலும் பறவைகள் இருந்த வீடியோ நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது. ஷாம்லா விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்தும் இது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார். சிங்கப்பூர் அதிகாரிகள் இதைக் கெட்ட பழக்கம் எனக் குறிப்பிடுகிறார்கள்.

சரி, இனிமேலாவது மீண்டும் இதைச் செய்ய மாட்டார் என அங்குள்ள அதிகாரிகள் கருதினர். இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்தித்து மூன்று நாட்கள் கூட ஆகாத சூழலில், அவர் மீண்டும் பறவைகளுக்கு உணவளித்துள்ளார். அப்போது அவரை கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்தனர்.

அபராதம்

சட்டத்தைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தும் வகையில் ஷாம்லா செயல்பட்டு வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிந்தே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் அவருக்குப் பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.

இந்த வழக்கில் ஷாம்லா வழக்கறிஞர் இல்லாமல் தானாகவே ஆஜரானார். தனக்கு வேலை இல்லை என்று குறிப்பிட்ட அவர், மருத்துவக் காப்பீடு எடுக்கும் அளவுக்குக் கூட நிதி இல்லை என்பதால் அபராதத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அல்லது சமூக சேவை செய்ய உத்தரவிடுமாறு கோரினார். இருப்பினும், ஷாம்லா வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் அவருக்கு 3,200 சிங்கப்பூர் டாலர், அதாவது ரூ.2.27 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது. மீண்டும் இதைத் தவறு செய்தால் 10,000 சிங்கப்பூர் டாலர் வரை அவருக்கு அபராதம் விதிக்கப்படும்.

சிங்கப்பூர் விதிகள்

சிங்கப்பூரில் பறவைகள் உட்பட உட்பட வனவிலங்குகளுக்கு உணவளிப்பது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. புறாக்களுக்கு ஒரு இடத்தில் தொடர்ந்து உணவளித்தால் புறாக்கள் மிக அதிக எண்ணிக்கையில் அந்த இடத்தில் குவியும். அப்போது சாலமோனெல்லா போன்ற நோய்க்கிருமிகளைப் பரவும் ஆபத்து இருக்கிறது. அதன் கழிவுகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும். இதனால் நிமோனியா போன்ற மோசமான பாதிப்புகளும் ஏற்படலாம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+