உறவில் முழு திருப்தி இல்லை! பணத்தை திருப்பி கொடு! மறுத்த பாலியல் தொழிலாளியை தாக்கிய இளைஞர் கைது
சிங்கப்பூர்: நான் முழுசாக திருப்தி அடையவில்லை என்றும் நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடு என்றும் பாலியல் தொழிலாளியிடம் கேட்டு அவரை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரிந்து வருபவர் கோ ஜுன் லியாங் (Goh Jun Liang) (28). மலேசியரான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு பெண்ணை தாக்கியதால் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை அவரும் ஒப்புக் கொண்டார்.

அந்த நபருக்கு இப்போது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அமலில் உள்ள விதியின் கீழ் பாதிக்கப்பட்ட சீன பெண்ணின் பெயர் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கோ, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 7 மணிக்கு பாலியல் சேவைகளை கொடுக்கும் இணையதளத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் அவர் குறித்த தகவல்களையும் பார்த்தார். இதையடுத்து அந்த பெண்ணுடன் உறவு கொள்ள 130 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் 8000 ரூ) கேட்டுள்ளனர்.
இதற்கு ஒப்புக் கொண்ட கோ, அன்று இரவே அந்த பெண்ணை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அந்த இடத்திற்கு இரவு 8 மணிக்கு அந்த பெண் சென்ற போது கோ அந்த பெண்ணிடம் 130 சிங்கப்பூர் டாலர்களை கொடுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் உறவு கொண்டுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் ஆடைகளை அணிந்து கொண்டு புறப்பட தயாரான போது அந்த பெண்ணிடம் கோ, மீண்டும் ஒரு முறை உறவு கொள்ள வேண்டும். அதற்கான கட்டணத்தையும் செலுத்தி விடுகிறேன் என கூறியுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் ஒப்புக் கொண்டு மேலும் 130 டாலர்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அப்போதுதான் அந்த பெண்ணுடன் கோ உடலுறவு கொண்டுள்ளார். இதனால் அவரால் மீண்டும் உறவில் ஈடுபட முடியவில்லை. இதனால் அந்த பெண்ணை வேறு வகையில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார், மேலும் உறவில் ஈடுபட முடியவில்லை என்ற கோபம் ஒரு பக்கம் , மறுபக்கம் மீண்டும் கொடுத்த 130 டாலர் வீணாகிவிட்டதே என்ற கவலை இருந்தது.
அதற்கேற்ப அந்த பெண் கோவின் செக்ஸ் டார்ச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்த பெண்ணின் பாலியல் சேவைகள் திருப்தி அளிக்கவில்லை என கூறி அவர் கொடுத்த 260 டாலர்களையும் மொத்தமாக திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், நீ தானே மீண்டும் வேண்டும் என கேட்டாய், உனக்கு திருப்தி ஏற்படாவிட்டால் நான் எதையும் செய்ய முடியாது என கூறி மறுத்தார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த கோ, அங்கிருந்த உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டிலால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் கழுத்திலும் காயங்களை ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து அந்த பெண் அங்கிருந்து தப்பியோடி போலீஸில் புகார் கொடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications