டாக்டர் செய்யுற வேலையா இது.. ஷூவில் கேமரா.. ஸ்கர்ட் அணியும் பெண்கள் டார்கெட்! 3200 வீடியோ
சிங்கப்பூர்: தனது ஷுவில் ரகசிய கேமராவை பொருத்தி, ஏராளமான பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து மருத்துவரின் லைசென்சை சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சில் ரத்து செய்துள்ளது.
பல முறை கைது செய்யப்பட்ட போதிலும், அந்த மருத்துவர் தனது இந்த மோசமான பழக்கத்தை தொடர்ந்ததால் இந்த அதிரடி நடவடிக்கையை சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சில் எடுத்துள்ளது.
மருத்துவம் படித்திருந்தும், ஒழுக்கம் இல்லாததால் இனி வாழ்நாள் முழுக்க அவரால் மருத்துவர் தொழிலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பார்ட்டிக்கு சென்ற போது...
சிங்கப்பூரில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை
சிகிச்சை நிபுணராக பணிபுரிந்தவர் சூ பென் (32). தொழிலில் மிகவும்கெட்டிக்காரராக இருந்ததால் இவருக்கு அந்த மருத்துவமனையில் மிகவும் நல்ல பெயர் இருந்தது.
இந்த சூழலில், கடந்த 2018-ம் ஆண்டு சக பெண் மருத்துவருடன் சூ பென் ஒருபார்ட்டிக்கு சென்றார். அப்போது சூ பென்னுக்கு தெரியாமல் அவரது செல்போனைபெண் மருத்துவர் பார்த்துள்ளார். அப்போது தனது அந்தரங்கப் பகுதியை அவர்
வீடியோ எடுத்து வைத்திருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மீண்டும் வேலையை காட்டிய சூ பென்..
பின்னர், இதுகுறித்து அவர் புகார் அளிக்கவே, சூ பென்னை போலீஸார் கைதுசெய்தனர். எனினும், சில மாதங்களில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். திறமையானமருத்துவர் என்பதால் அவருக்கு அதே மருத்துவமனையில் மீண்டும் வேலைகிடைத்தது. இனியாவது ஒழுங்காக இருப்பார் என்று நினைத்தால், வேதாளம்
மீண்டும் முருங்கை ஏறுவதை போல மறுபடியும் தனது தில்லாலங்கடி வேலையை சூ பென் ஆரம்பித்தார்.
இதனிடையே, தனக்கு கீழே வேலை பார்க்கும் ஒரு நர்ஸை இதுபோல வீடியோ எடுத்துஅவர் மாட்டிக் கொண்டார். கடந்த முறை போல அல்லாமல், இந்த முறை அவரை கைதுசெய்த போலீஸார், சூ பென்னை செமத்தியாக கவனித்தனர். அப்போதுதான் பல உண்மைகள் தெரியவந்தது.

ஷூவில் ரகசிய கேமரா
அதாவது, சூ பென் தனது ஷுவில் ரகசிய கேமராவை பொருத்தி பெண்களின் அந்தரங்கப்
பகுதிகளை வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். குட்டை பாவாடை
(ஸ்கர்ட்) அணிந்த பெண்கள்தான் அவரது டார்கெட்டாக இருந்துள்ளது. இதுபோல
3,200-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் வீடியோ எடுத்துள்ளார். இவை அனைத்தையும்போலீஸாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். சூ பென் மீதான குற்றம்நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

லைசென்ஸ் ரத்து
ந்நிலையில், வரும் ஜனவரி மாதம் சூ பென் விடுதலையாவதாக இருந்தது. இதையடுத்து, பணியில் ஒழுக்கம் கடைப்பிடிக்க தவறியதாலும், பெண்களுக்கு
இவரால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும் எனக் கருதப்படுவதாலும் சூ பென்னின் மருத்துவர் உரிமத்தை சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சில் அதிரடியாக
ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனால் சிறையில் இருந்து வெளியே வந்தாலும், சூ பென்னால் இனி வாழ்நாள் முழுக்க டாக்டர் தொழிலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications