சிங்கப்பூரில் அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுச்சு! 3000 டபுள் பரிசு பணம்.. ஆனா ஒரு சிக்கல்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் லாட்டரி மற்றும் பந்தயங்களை அதிகாரப்பூர்வமாக நடத்தும் ஒரே நிறுவனம் 'சிங்கப்பூர் பூல்ஸ்'. உலகமே வியந்து பார்க்கும் அளவுக்குத் தொழில்நுட்பத்தில் கச்சிதமாக செயல்படும் இந்த நிறுவனத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத ஒரு "மேஜிக்" நடந்தது. அது என்ன தெரியுமா?
அரசின் அனுமதியுடன் லாட்டரி மற்றும் விளையாட்டு பந்தயங்களை சட்டப்படி நடத்தும் ஒரே நிறுவனம் இந்த Singapore Pools.. 1968ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சட்டவிரோத சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது.. இதன் லாபம் சமூக நலத் திட்டங்கள், விளையாட்டு மற்றும் பல்வேறு பொதுநல முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது..

சிங்கப்பூர் பூல்ஸ் - பரிசுத்தொகை
அந்தவகையில், சம்பவத்தன்று லாட்டரியில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.. அதாவது ஆன்லைன் மூலம் பந்தயம் கட்டியவர்களுக்கு, அவர்கள் ஜெயித்த பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.. ஆனால், ஒருமுறைக்கு இருமுறையாக பரிசுத்தொகை விழுந்துவிட்டது.. அந்தவகையில் இரண்டு மடங்கு பணம் அவர்களுடைய அக்கவுண்ட்டில் தானாகவே பேய் விழுந்தது.
உதாரணத்திற்கு, ஒருவர் 1000 ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால், அவருடைய கணக்கில் 2000 ரூபாய் இருந்தது. இப்படி ஒருவர், இருவர் இல்லை,.. சுமார் 3,000 பேர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இது கடவுள் கொடுத்த வரம் அல்ல, அந்த நிறுவனத்தின் கம்ப்யூட்டர் செய்த பிழை என்பது (Software Glitch) என்பது பிறகுதான் தெரியவந்தது.
டபுள் பணம் - குளறுபடி
இந்த குழப்பம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் சுமார் 13,000 பேர் கட்டிய பந்தயங்கள் சிஸ்டத்திலேயே பதிவாகாமல் காணாமல் போனது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, காசு கொடுத்து டிக்கெட் வாங்கியும், அது கணக்கில் ஏறவில்லை. இதனால் சுமார் 1 லட்சம் சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான தொகை குளறுபடியானது. இது ஏதேனும் ஹேக்கர்களின் கைவரிசையா என்றெல்லாம் சந்தேகம் கிளம்பியது..
ஆனால், உடனடியாக நிறுவனம் அதை மறுத்து, இது வெறும் தொழில்நுட்பக் கோளாறுதான் என்று விளக்கம் அளித்துவிட்டது..
இப்போது சிக்கல் என்னவென்றால், தவறுதலாக கூடுதலாக பணம் பெற்ற அந்த 3,000 பேரையும் காணவில்லையாம்.. அவர்களை சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் தேடி பிடித்து வருகிறது.
லக்கி தவறு
"தவறுதலாக வந்த பணத்தை திருப்பித் தந்துவிடுங்கள் ப்ளீஸ்" என்று அவர்களுக்கு மெசேஜ் அனுப்பி வருகிறது.. சட்டப்படி பார்த்தால், அடுத்தவர் பணம் தவறுதலாக நம்மிடம் வரும்போது அதை திருப்பித் தருவதுதான் முறை. ஆனால், வந்த பணத்தைச் செலவு செய்தவர்கள் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளனர்.
அதே சமயம், பந்தயம் கட்டியும் கணக்கில் வராதவர்களுக்கு அவர்கள் கட்டிய பணத்தை திருப்பித் தருவதாகவும், அவர்கள் வெற்றி பெற்றதற்கான ஆதாரம் இருந்தால் பரிசுத் தொகையை வழங்குவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
லாட்டரியில் விழுந்த லாட்டரி
சிங்கப்பூர்வாசிகள் இப்போது இதை "லாட்டரியில் விழுந்த லாட்டரி" என்று சமூக வலைதளங்களில் கிண்டலாகப் பேசி வருகிறார்கள். அதிர்ஷ்டம் என்பது ஒரு முறைதான் வரும், ஆனால் அது இப்படித் தவறுதலாக வந்துவிட்டுத் திரும்பக் கேட்கும்போதுதான் தலைவலியாக மாறுகிறது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கத் தனது கணினி பாதுகாப்பை பலப்படுத்தப்போவதாகச் சிங்கப்பூர் பூல்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications