குட்டிக்கரணமே அடித்தாலும் சிங்கப்பூர்வாசியால் கூட.. சிங்கப்பூரில் வீடு வாங்க முடியாது! ஏன் தெரியுமா
சிங்கப்பூர்: உலகின் குட்டி நாடான சிங்கப்பூரில் அந்த நாட்டின் குடிமக்களே கூட வீடுகளை வாங்க முடியாது தெரியுமா.. அங்கு ஒருவர் சொந்தமாக வீட்டை வாங்கியதாகக் கருதினாலும் கூட உண்மையில் அவர்கள் 99 ஆண்டு குத்தகைக்கே எடுக்கிறார்கள். சிங்கப்பூர் அரசு ஏன் அதுபோல செய்கிறது. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
உலகின் மிகக் குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இதனால் வழக்கமாக மற்ற நாடுகளைப் போல ரியல் எஸ்டேட் விதிகளைச் சிங்கப்பூர் வைத்திருந்தால் சீக்கிரமே அதன் நிலப்பரப்பு பற்றாமல் போய்விடும். எனவே, இடப்பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கச் சிங்கப்பூர் ஒரு தனித்துவமான நில மேலாண்மை உத்தியைக் கையாள்கிறது.

99 ஆண்டுகள்
அங்குப் பெரும்பாலான நிலங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை.. மாறாகக் குத்தகைக்கு மட்டுமே விடப்படுகிறது. அதாவது நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளராகவே இருந்தாலும் டெக்னிக்கலாக அந்த வீடு சிங்கப்பூர் அரசுக்கே சொந்தமாக இருக்கும். 99 ஆண்டுகளுக்கு அது குறிப்பிட்ட நபருக்குக் குத்தகை விடப்பட்டதாகவே பொருள்! 99 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நிலம் அரசின் வசம் சென்றுவிடும்.
பின்னணி
1965ல் சுதந்திரம் பெற்றபோது, சிங்கப்பூர் நிலப்பரப்பில் பாதி மட்டுமே அரசுக்குச் சொந்தமாக இருந்தது. பின்தங்கிய துறைமுகத்தை நவீனப் பெருநகராக மாற்ற, சிங்கப்பூர் அரசு 1966ல் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது. இதுவே சிங்கப்பூர் அரசின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இதன் மூலம் பொதுப் பயன்பாட்டிற்காகத் தனியார் நிலங்களை அரசால் கையகப்படுத்த முடிந்தது.
தனியார் நிலங்களைக் கையகப்படுத்திய சிங்கப்பூர் அரசு, அங்கு மக்கள் வாழக்கூடிய வகையில் பெரிய குடியிருப்பு திட்டங்களை ஏற்படுத்தியது. அந்தக் காலகட்டத்தில் கையகப்படுத்தலைத் தீவிரமாக மேற்கொண்ட சிங்கப்பூர் அரசு, 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 90% நிலத்தைத் தனது வசம் கொண்டு வந்தது. வெறும் 10% நிலமே தனியாருக்குச் சொந்தமாக இருந்தது. இப்போது வரையிலும் கூட அதே நிலை தான் தொடர்கிறது.
காரணங்கள்
இப்போதும் ஒருவர் சிங்கப்பூரில் ஒரு வீடு அல்லது குடியிருப்பை வாங்கினால் அது நிரந்தரமாக விற்கப்படுவதாகப் பொருள் இல்லை. 99 ஆண்டு குத்தகைக்கு விடப்படுவதாகவே பொருள்! 3 முக்கியமான விஷயங்களை மனதில் வைத்தே சிங்கப்பூர் அரசு இந்தக் கொள்கை முடிவை எடுத்தது.
முதலில் எதிர்காலத் தலைமுறையினருக்குப் போதியளவில் நிலம் இருப்பதை உறுதி செய்வது. ஒருவரிடம் நிரந்தரமாக நிலம் சென்றால், எதிர்காலத் தலைமுறைக்கு அது பரவலாக்கப்படாமல் போகலாம்.. அதேநேரம் குத்தகை என்றால் குறிப்பிட்ட காலம் முடிந்ததும், நிலம் மீண்டும் அரசு வசமே வரும். இதன் மூலம் அரசு பழைய கட்டிடங்களை இடித்து, நவீன உயரமான கட்டிடங்களை உருவாக்க உதவுகிறது. இதன் மூலம் காலத்திற்கு ஏற்ப ஒரே இடத்தில் அதிக நபர்கள் வசிக்க முடியும்.
பயன்கள்
அடுத்து நில விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது! இந்தக் குத்தகை மூலம் சிங்கப்பூர் அரசு விலைகளைக் குறைக்கிறது. கணிசமான மானியங்கள் வழங்குகிறது. இதை HDB என்பார்கள். இந்தக் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் போதியளவில் இருக்கும். அரசு மானியங்கள் இருப்பதால் விலையும் மிகக் குறைவு! இதனால் சுமார் 88% மக்கள் இந்த வீடுகளிலேயே வசிக்கிறார்கள். மேலும், நிலம் அரசின் கண்ட்ரோலில் இல்லை என்றால் குறிப்பிட்ட செல்வந்தர்களிடமே அதிக நிலம் குவியும். சிங்கப்பூர் போன்ற குட்டி நாட்டில் அது சிக்கலை உருவாக்கும். இந்த 3 காரணங்களைக் கருத்தில் கொண்டே அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்தது.
3 வகை வீடுகள்
இப்போது சிங்கப்பூரில் 3 வகையான வீடுகள் உள்ளன. முதலில் HDB.. சிங்கப்பூர் ரியல் எஸ்டேட் முதுகெலும்பு இவை தான்.. இதில் அனைத்து வீடுகளுமே குத்தகை அடிப்படையில் இருக்கும். முன்பே குறிப்பிட்டது போலக் கிட்டத்தட்ட 90% பேர் இந்த வீடுகளில் தான் வசிக்கிறார்கள். அடுத்து தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புகள்.. அங்குள்ள மொத்த வீடுகளில் 16-17% இதுபோல இருக்கும். அரசு நிலங்களில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து தனியார் நிறுவனங்கள் இதைக் கட்டும். இதில் HDB வீடுகளைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் இருக்கும். விலையும் அதிகம்.
அடுத்துத் தனி வீடுகள். அங்கு மொத்தக் குடும்பங்களில் வெறும் 5% மட்டுமே தனி வீடுகளில் வசிக்கிறது.. அதிக நிலப்பரப்பை எடுப்பதால், இன்று இதுபோல தனி வீடுகள் கட்டப்படுவது அரிது. இவை தனியார் சொத்து என்பதால், இவை தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்படும் மிக உயர்ந்த மதிப்புமிக்க சொத்துக்களாகும்.
வாங்கவே முடியாது
இதன் காரணமாகவே அங்குப் பெரும்பாலும் விற்பனைக்கு வரும் வீடுகள் முதல் 2 வகை வீடுகள் தான். அதை ஒருவர் வாங்கினாலும் கூட டெக்னிக்கலாக அந்த வீட்டிற்குச் சொந்தமாக மாட்டார்கள். 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்ததாகவே பொருள்!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications