"உன்னை கொல்லாமல் விட மாட்டேன்!" பல முறை காதலியை கொல்ல முயன்ற மலேசிய தமிழர்! தட்டி தூக்கிய போலீஸ்
சிங்கப்பூர்: தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மலேசிய இளைஞர் அவரது காதலி மீது சந்தேகம் கொண்டு அவர் அடித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர் பார்த்திபன் மணியம். இவர் தன்னுடன் வேலை செய்து வந்த 38 வயதான பெண் ஒருவரை டேட் செய்துள்ளார்.
அப்போது பார்த்திபன் மணியம் அந்த பெண்ணை தாக்கியதாகவும் கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பார்த்திபன் மணியம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இளைஞர்
30 வயதான பார்த்திபன் அந்த பெண்ணை 2 முதல் 3 ஆண்டுகள் வரை டேட் செய்து வந்துள்ளார். இதையடுத்து சிங்கப்பூரில் அப்பெண்ணின் உறவினர் தங்கி இருந்த வீட்டில் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி 23ஆம் தேதி வரை ஒன்றாக இருந்துள்ளனர். அன்றைய தினம் தனது நண்பர்களுடன் பார்த்திபன் மது குடித்துள்ளான். அப்போதே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஃபோனில் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு வந்ததும், பார்த்திபன் வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், அப்பெண்ணைத் தகாத வார்த்தைகளாலும் திட்டி உள்ளார். பிரச்சினையைத் தீர்க்க அப்பெண்ணின் உறவினர் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.

கொலை மிரட்டல்
அப்போது பார்த்திபன் தனது காதலியை அறைந்துள்ளார். உறவினர் அவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து பார்த்திபன் தனது காதலியின் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அங்கிருந்த மரச்சாமானை கொண்டும் அப்பெண்ணைத் தாக்கி உள்ளார். பார்த்திபனிடம் இருந்து தப்பித்துக் கொள்ள அப்பெண் பதிலுக்குத் தாக்கி உள்ளார். நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த பெண்ணின் உறவினர் உடனடியாக போலீசாரை அழைத்துள்ளனர். பார்த்திபனை போலீசார் கைது செய்த போதிலும், அவர் சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

கத்தி
இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, பிப்ரவரி 28இல் பார்த்திபன் அங்கிருந்து வெளியேறி உள்ளார். இருப்பினும், மீண்டும் திரும்பி வந்துள்ளார். அந்த பெண் பார்த்திபனை உள்ளே அனுமதிக்க மறுத்ததால், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்துள்ளான். அவளது போனை பிடுங்கிய அவர், அப்பெண்ணின் முகத்திலேயே தாக்கி உள்ளார். மேலும், அப்பெண்ணை நோக்கி கத்தியைக் காட்டி, "கண்டிப்பாகக் கொன்றுவிடுவேன்" என்று தமிழில் மிரட்டி உள்ளார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கத்தரிக்கோலைக் காட்டி அவளைக் கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளார். அப்பெண் கஷ்டப்பட்டு பார்த்திபனை சமாதானம் செய்துள்ளார்.

பாஸ்போர்ட்
அதன் பின்னரே பார்த்திபன் கத்திரியைக் கீழே போட்டுள்ளான். பார்த்திபன் அடுத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் அவன் சொன்னதை போலவே தனது உடைமைகள் பேக் செய்துள்ளார். அப்போதும் கூட பார்த்திபன் அப்பெண்ணைத் தொடர்ந்து தாக்கி உள்ளார். மேலும், அவரது மலேசிய பாஸ்போர்ட்டையும் கிழித்ததாகக் கூறப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே வந்ததும், பார்த்திபனை ஏமாற்றிவிட்டு, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அப்பெண் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். இந்த முறையும் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இருப்பினும், வர சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

கொலை மிரட்டல்
பின்னர் கடந்த மார்ச் 11ஆம் தேதி, அவளைத் தொடர்பு கொண்டு ஆடைகளை திருப்பித் தருமாறு பார்த்திபன் கேட்டுள்ளான். துணிகளை வாங்க கார் பார்க்கிங்கிற்கு வரச் செல்லியுள்ளான். அங்கே அவளைப் பார்த்தும் அப்பெண்ணைக் கொல்லப் போவதாக மீண்டும் மிரட்டி உள்ளான். மேலும், டாக்ஸியில் ஏறச் சொல்லியும் வற்புறுத்தி உள்ளான். இருப்பினும், அப்பெண் ஏற மறுத்து அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்துள்ளார்.

ஃபோனை உடைப்பு
இதனால் ஆத்திரமடைந்த அவன், உலோகப் பாட்டில் மூடியைக் கூர்மையாக்கி பெண்ணின் கழுத்தில் வைத்து மிரட்டி உள்ளார். பின்னர் பெண்ணை மொபைலை பிடுங்கி, "வேறு ஆண்கள் உடன் ஏன் பேசுகிறாய்? என்னை ஏமாற்ற நினைத்தாயா" என்று ஆவேசமாகக் கேட்டுள்ளான். மேலும், அவளது சிம் கார்டையும் விழுங்கிவிட்டு தொலைப்பேசியை பெஞ்சில் தட்டி உடைத்துள்ளார். மேலும், அந்த பெண்ணை நோக்கி மது பாட்டிலை வீசி உள்ளான். நல்வாய்ப்பாக அது அவர் மீது படவில்லை.

மது பாட்டில்
இதையடுத்து மற்றொரு மது பாட்டிலைக் குடித்துவிட்டு, அதை உடைத்து கூர்மையான பகுதியை அப்பெண்ணின் கழுத்தில் வைத்து மிரட்டி உள்ளான். பெண்ணை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளான். சில நிமிடங்களுக்குப் பின்னர், அப்பெண் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது, அப்பெண்ணின் கழுத்தை நெறித்துள்ளான். சரியாக அந்த சமயத்தில் போலீஸ் ரோந்து கார் அங்குச் சென்றதால், அவர்களிடம் அப்பெண் உதவி கோரி உள்ளார்.

தண்டனை
அதன் பின்னர் அவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில், காதலியை மிரட்டியதற்காக 7 மாதங்கள் மூன்று வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீது இன்னும் 6 வழக்குகள் விசாரணையில் உள்ளது. இதில் கொலை மிரட்டலுக்கு, பார்த்திபனுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம். அதேபோல பெண்ணை தாக்கியதற்கு அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம். மேலும் தவறு செய்ததற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்.












Click it and Unblock the Notifications