சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பலே திட்டம்.. கொரோனா மானியம் பெற மோசடி.. இந்திய பெண் சிங்கப்பூரில் கைது

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: கொரோனா ஆதரவு மானியத்திற்காக மோசடி செய்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூரில் 16 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த வருடத்தில் சில மாதங்கள் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து பொருளாதார அளவில் பெரும் இழப்பை சிங்கப்பூர் மக்கள் சந்தித்தனர். இதன் காரணமாக வேலை இழந்த மக்களுக்கு குறிப்பிட்ட அளவு கொரோனா மானியமாக வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்தது.

தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி.. விபத்தில் சாலையின் நடுவில் அமர்ந்திருந்த 3 பேர் பலி தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி.. விபத்தில் சாலையின் நடுவில் அமர்ந்திருந்த 3 பேர் பலி

குறிப்பாக வரி செலுத்துவோருக்கு பல்வேறு விலக்குகளை அழித்து சிங்கப்பூர் அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து தொழிலதிபர்கள் பணியாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் மானியம் பெற்று வந்தனர். மேலும் ஏற்கனவே செலுத்த வேண்டிய வரி பாக்கியும் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய பெண் மோசடி

இந்திய பெண் மோசடி

இந்நிலையில் கொரோனா மானியத்தை பெறுவதற்காக வரிஏய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இந்திய பெண்ணுக்கு 16 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அப்பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் 48 வயதான ராஜகோபால் மாலினி கடந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் கொரோனா ஆதரவு மானியத்தில் இருந்து பணத்தைப் பெறும் முயற்சியில் அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாக போலியான கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

திருட்டி கிரெடிட்கார்டில் ஷாப்பிங்

திருட்டி கிரெடிட்கார்டில் ஷாப்பிங்

மேலும் 4 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களுக்கு மேல் தங்களுக்கு வழங்கப்பட்ட பராமரிப்பு கட்டணத்தையும் அவர் திருடியதாக புகார் எழுந்தது. அத்தோடு இல்லாமல் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் 13500 சிங்கப்பூர் டாலர்கள் மதிப்பில் திருடப்பட்ட கிரெடிட் கார்டு மூலம் அவர் பொருள் வாங்கியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.

மோசடி குறித்து மேலாளர் புகார்

மோசடி குறித்து மேலாளர் புகார்

மாலினி பணி நீக்கம் செய்யப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட போலி கடிதத்தை அடுத்து அந்நாட்டின் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் மாலினி பணியாற்றிய நிறுவனத்தில் மேலாளரை அழைத்து என்ன காரணத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டது என விளக்கம் கேட்டனர் அப்போது மாளிகை தாக்கல் செய்தது போலியான கடிதம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மேலாளர் கடந்த அக்டோபரில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

16 மாத சிறை

16 மாத சிறை

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தனது குழந்தைகளின் தேவைக்காக என்பதற்காகவே சட்டவிரோத ஷாப்பிங் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இருந்தும் மோசடி மற்றும் திருட்டு குற்றத்திற்காக மாலினிக்கு 16 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்

English summary
A woman of Indian descent has been sentenced to 16 months in prison in Singapore for defrauding a corona support grant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X