சிவகங்கையில் கடன் இஎம்ஐ செலுத்தாததால் வீட்டை பூட்டிய நிதி நிறுவனம்.. அடுத்த நாளே கலங்க வைத்த காட்சி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கூலித்தொழிலாளி சுப்பையா என்பவர் வீடு கட்ட வாங்கிய கடன் தவணையை சுமார் ஒன்றரை ஆண்டுகளாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வீடு கட்ட கடன் கொடுத்த தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் நேரில் வந்து வீட்டை பூட்டினார்கள். இதனால் விரக்தி அடைந்த சுப்பையாவின் 19வயது மகன் வீட்டிற்குள் போனவர் வெளியே வரவே இல்லை.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
வீடு கட்ட கடன் வாங்குவோர், வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்குவோர், தங்களால் வீட்டுக்கடனை அடைக்க முடியும் என்பது உறுதியாக தெரிந்தால் கடன் வாங்குங்கள். மாதம் மாதம் இஎம்ஐ கட்ட முடிகிற அளவிற்கு வேலை உறுதியாக கிடைக்கும். இப்போது பார்க்கும் வேலை ஒருவேளை போனாலும், இதே சம்பளத்தில் புதிய வேலைக்கு எளிதாக போக முடியும் என்கிற நிலை இருந்தால் மட்டும் வீட்டுக்கடன், வீடு அடமானக்கடனை வாங்குங்கள். இல்லாவிட்டால் கடன் தவணையை கட்ட முடியாத நெருக்கடி ஏற்படும். கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள், வங்கிகள் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் சிலர் முட்டாள்தனமான முடிவுகளையும், தவறான முடிவுகளையும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிறார்கள். அப்படிப்பட்ட முடிவுகளால் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வடகரை பகுதியை சேர்ந்த 55 வயதாகும் சுப்பையா என்ற கட்டிட தொழிலாளி வீடு கட்ட விரும்பியுள்ளார். இவர் வீடு கட்டுவதற்காக வீட்டு பத்திரத்தை மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து 2016-ம் ஆண்டு ரூ.4 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய தொகைக்கு கடந்த ஒன்றரை ஆண்டாக சுப்பையாக தவணைத்தொகை செலுத்தவில்லையாம். எனவே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த 14-ந் தேதி வீட்டில் உள்ளவர்களை வெளியேற்றி வீட்டை பூட்டியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சுப்பையாவின் இளைய மகனான திருப்பூரில் இருந்த முத்துக்காளைக்கு(வயது 19) உறவினர்கள் செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 16-ந் தேதி இரவு வந்த முத்துக்காளை, தனியார் நிதி நிறுவனத்தால் பூட்டி சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டார். அவரை பெற்றோர், உறவினர்கள் வெளியே வரச்சொல்லி கதவை தட்டியிருக்கிறார்கள்.
ஆனாலும் முத்துக்காளை நீணட நேரமாக கதவை திறக்கவில்லை. மேலும் வீட்டின் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. மறுநாள் காலை வரையிலும் முத்துக்காளை வீட்டில் இருந்து வெளியே வரவே இல்லை.. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது முத்துக்காளை வீட்டின் உள்ளே மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை விட்டது தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்கள்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று இளைஞர் முத்துக்காளையின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முத்துக்காளையின் தாய் லட்சுமி கூறும் போது, வாங்கிய கடன் தொகைக்கும் மேல் தொகையை திரும்ப செலுத்திவிட்டோம். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டாக மாத தவணைத்தொகையை செலுத்த முடியவில்லை.. நிதி நிறுவன ஊழியர்களிடம் காலக்கெடு கேட்டு காலில் விழுந்து கெஞ்சினோம். ஆனால் அவர்கள் வீட்டை பூட்டி சென்றனர். இதனால் மன வருத்தம் அடைந்த முத்துக்காளை வீட்டில் உயிரையே விட்டுவிட்டார் என்றார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications