Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகங்கையில் மின் இணைப்பு பெயர் மாற்றப்போன ரமேஷ்.. 3 நோட்டில் மொத்தமாக சிக்கிய ஆபிசர்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பெருமச்சேரி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 35 வயதாகும் ரமேஷ் என்பவரது வீட்டின் மின்இணைப்பு அவரது தந்தையின் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய ரூ.1,500 லஞ்சம் வாங்கியதாக உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பல வழிகள் உள்ளன. அதற்காகவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் செயல்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஒவ்வொரு மாவட்டத்திலும் டிஎஸ்பி தலைமையில் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், காவலர்கள் பணியில் இருப்பார்கள். இவர்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் பற்றி புகார் அளித்தால், அவர்களை கையும் களவுமாக பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

electricity connection government employees

அப்படி கையும் களவுமாக சிக்கி கைதாகும் அரசு ஊழியர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள். இப்படிப்பட்ட வழக்கில் சிறை தண்டனை கிடைத்தால் கண்டிப்பாக மேல்முறையீடு செய்து வெளிவருவது கூட கடினமாகும். இப்படிப்பட்ட நிலையிலும் ஆங்காங்கே சிலர் லஞ்சம் வாங்கி கைதாகி வருகிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் மதுரை, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான அரசு ஊழியர்கள் இப்படி கைதாகி உள்ளனர். சிவகங்கையில் ஒரு அரசு ஊழியர் கைதாகி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெருமச்சேரி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 35 வயதாகும் ரமேஷ் என்பவரது வீட்டின் மின் இணைப்பு அவரது தந்தையின் பெயரில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்ற இளையான்குடி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக ரமேஷ், உதவி மின் பொறியாளராக உள்ள பரமக்குடியை சேர்ந்த 51 வயதாகும் சிவக்குமார் என்பவரை அணுகியுள்ளார். மின் இணைப்பு பெயரை மாற்ற உதவி பொறியாளர் சிவக்குமார், ரூ.1,500 லஞ்சமாக தர வேண்டும் என சொல்லியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ், இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோவிடம் புகார் கொடுத்தார். அவருடைய அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரமேசிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர்.

அதனை ரமேஷ், மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று உதவி பொறியாளர் சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சிவக்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+