Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாட்டில் கணவன்.. பக்கத்து வீட்டில் கள்ளக்காதலன்.. இரட்டை கொலையின் பயங்கர பின்னணி

சிவகங்கையில் தாய் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 55 நாட்களுக்கு பிறகு கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை : சிவகங்கையில் தாய் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 55 நாட்களுக்கு பிறகு கொலையாளிகள் சிக்கி இருக்கிறார்கள். பெண்கள் கொலைக்கு காரணம் என்ன? திட்டம் போட்ட கொலையாளிகள் யார் ? என்பதை விரிவாக பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமம் ஜனவரி 10ம் தேதி மிகவும் கொந்தளிப்பாக இருந்தது. காரணம் என்னவென்றால் அந்த ஊரைச் சேர்ந்த தாய், மகள் என இரண்டு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தான். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த கொலை வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் அவதிப்பட்ட போலீசார் கடைசியில் 55 நாட்களுக்கு பிறகு கொலையாளிகளை கைது செய்திருக்கிறார்கள்.

மலேசியா சென்றார்

மலேசியா சென்றார்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகம். இவரது மகள் வேலுமதி, இவருக்கு 12 வயதில் பூவரசன் என்ற ஒரு மகன் உள்ளார். வேலுமதி கர்ப்பிணியாக இருக்கும் போதே கணவர் மலேசியாவிற்கு சென்றதால், இவர்கள் 3 பேர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி தாய் கனகம், மகள் வேலுமதி, பேரன் பூவரசன் என 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். பதறிப்போன அக்கம் பக்கத்தினர். போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வந்து பார்த்த போது, வேலுமதி சடலமாக மீட்கப்பட்டார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட கனகம் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். சிறுவன் பூவரசன் மட்டும் சிகிச்சையின் பலனாக உயிர் பிழைத்தார்.

நகைகள் கொள்ளை

நகைகள் கொள்ளை

இதனிடையே இவர்கள் வீட்டில் இருந்த 46 சவரன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. நகை பணத்திற்காக நடந்த கொலை தான் என உறுதியான நிலையில், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தும் எந்தவித துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. காரணம், கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கொலையாளிகளை நெருங்க முடியவில்லை.

தனிப்படை அதிரடி

தனிப்படை அதிரடி

இந்த இரட்டை கொலையால் கொந்தளித்துப்போன கிராம மக்கள், கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அண்மையில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தசூழலில் பலகட்ட முயற்சிக்கு பிறகு கொலையாளிகளை சுற்றி வளைத்திருக்கிறது தனிப்படை. இதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது வேலுமதியின் தகாத உறவுதான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

பக்கத்து வீட்டு சுரேஷ்

பக்கத்து வீட்டு சுரேஷ்

கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்த சுரேஷ் என்கிற வெள்ளைச்சாமியோடு வேலுமதிக்கு தொடர்பு இருந்துள்ளது. இருவரும் திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். இதனிடையே வேலுமதியின் அக்கா மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்திருக்கிறது. இதற்காக 50 சவரன் நகைகள், வெள்ளிப்பொருட்கள், சீர்வரிசை சாமான்கள் என எல்லாவற்றையும் வாங்கி, அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து வேலுமதியின் வீட்டில் வைத்திருக்கிறார்கள்.

திருச்சி சென்றார்

திருச்சி சென்றார்

வேலுமதி வீட்டில் நகைகள், பொருட்கள் எல்லாம் இருந்ததை அறிந்த சுரேஷ், அதை அபகரிக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்காக நான்கு பேரை வரவழைத்திருக்கிறார் சுரேஷ். இந்த வழக்கில் தான் எந்த வகையிலும் சிக்கிவிடக்கூடாது என முன்னரே திட்டமிட்ட சுரேஷ், தனக்கு தெரிந்த போலீஸ் ஒருவரின் காரை எடுத்துக் கொண்டு திருச்சிக்கு சென்றிருக்கிறார்.

போலீசுக்கு சந்தேகமில்லை

போலீசுக்கு சந்தேகமில்லை

சுரேஷ் போட்டுக்கொடுத்த திட்டத்தின் படி நான்கு பேரும் கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றவே, அடுத்த நாள் எதுவுமே தெரியாதது போல வந்திருக்கிறார் சுரேஷ். போலீசாருக்கு இவர் மீது சந்தேகம் வராத அளவிற்கு இவரது நடவடிக்கையும் இருந்திருக்கிறது. கொலையாளிகளை பிடிக்கக் கோரி ஊரே ஒன்றுகூடி போராட்டம் நடத்திய போது, அந்த போராட்டத்தில் சுரேஷும் கலந்து கொண்டிருக்கிறார்.

3 பேர் கைது

3 பேர் கைது

மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சுரேஷுக்கு வேலுமதி வைத்திருந்த நகைகள் மீது ஒரு கண் இருந்திருக்கிறது. இதற்காக திட்டம் போட்டுக்கொடுத்து பெண்கள் இருவரையும் கொன்று நகைகள், பொருட்களை அபகரித்திருக்கிறார் சுரேஷ். பலகட்ட முயற்சிக்கு பிறகு கொலையாளிகளை நெருங்கிய போலீசார், சுரேஷ் என்ற வெள்ளைச்சாமி, ரமேஷ், விஜயகுமார் என 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தங்க மோதிரங்கள், வெள்ளிப்பொருட்கள் சிலவற்றை இதுவரை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள். மற்ற இரண்டு பேரும் தலைமறைவாக உள்ளதால், அவர்கள் இரண்டு பேரும் பிடிப்பட்டால், இந்த கொலையின் முழு பின்னணியும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் குறித்த தகவலும் வெளியே வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+