கீழடி அருகே கொந்தகையில் ஒரே குழியில் 7 மனித எலும்பு கூடுகள் கண்டெடுப்பு.. எந்த காலத்துடையது என ஆய்வு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வின் மற்றொரு பகுதியான கொந்தகையில் ஒரே குழியில் 7 முழு வடிவ மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில், கீழடி- அகரம்- மணலூர்- கொந்தகை ஆகிய 4 இடங்களில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக இது வரை 6 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இதில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. இதனை தொடர்ந்து தற்போது கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

கீழடி அகழாய்வு
கீழடி அருகே உள்ள மற்றொரு அகழாய்வு பகுதியான கொந்தகையில் நடத்தப்பட்ட முதல் கட்ட அகழாய்வின் போது கொந்தகை இடுகாட்டு பகுதியாக கண்டறியப்பட்டது. மனித எலும்புக்கூடுகள் முதுமக்கள் தாழிகள் கடந்த வருடம் கிடைத்தன.

கொந்தகையில் 2ஆம் கட்ட பணி
இதனை தொடர்ந்து இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் கொந்தகையில் 2 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி இது வரையிலும் 13 தாழிகள் கிடைத்துள்ளன. அதில் இரண்டு முதுமக்கள் தாழிகள் மற்றும் மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.

கொந்தகை அகழாய்வு
இந்நிலையில் கொந்தகை இரண்டாம் கட்ட அகழாய்வின் போது ஒரு குழியில் மேற்புறத்தில் 1 அடி ஆழத்திலே நேற்று வரை 3 எலும்புக் கூடுகள் கிடைத்தன. மேலும் அதனை தொடர்ந்து அதே குழியில் அதன் அருகே அருகே மேலும் 3 முழு வடிவ மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.

7 எலும்புகள்
இதுவரை ஒரே குழியில் 7 மனித எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதால் ஆராய்ச்சியாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. இங்கு கிடைத்த மனித எலும்புக் கூடு ஆணா ,பெண்ணா மற்றும் எத்தனை வருடம் பழமையானது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறினர்.

கீழடி அகழாய்வு
மேலும் கீழடி, அகரம் மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் உலகச்சிறப்பு வாய்ந்த நூலகம் அமையப்பட்டால் இந்த அகழாய்வு பணிகள் குறித்த விஷயங்கள் அனைவருக்கும் தெரியவரும்படி அருங்காட்சியகங்களும் வைக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications