எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தொல்லை கொடுப்பதற்காகவே இந்த பதவியா? - பாஜக மீது கி.வீரமணி காட்டம்!
அரசியல் சட்டத்தில் என்ன கூறியுள்ளதோ அதை தவிர மற்றதைச் செய்வதுதான் தமிழ்நாடு ஆளுநரின் பணியாக உள்ளது என கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
சிவகங்கை : எங்கெல்லாம் எதிர்க்கட்சியின் ஆட்சிகள் வருகின்றனவோ அங்கெல்லாம் தொல்லை கொடுப்பதற்காக குறுக்கு வழியில் அரசியல் ஆயுதமாக ஆளுநர் பதவியை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க உரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.

காணாமல் போவார்கள்
அப்போது பேசிய கி.வீரமணி, "திமுக கூட்டணி, கொள்கை கூட்டணி. வடநாட்டில் அமைவது அரசியல் கூட்டணி, அது அவ்வப்போது மாறும். தமிழ்நாட்டில் எந்த ஆட்சி மாறினாலும் அடிப்படைக் கொள்கை மாறாது. அதுதான் திராவிட மாடல். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியில் அமைத்திருப்பது கூட்டணி அல்ல. கூத்து அணி. விபத்து அரசியல் நடத்தி, அதன் மூலமாக வந்தவர்கள், நிலைத்து விடுவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஈரோடு தேர்தலுக்கு முன்னர் சிலர் காணாமல் போய்விட்டார்கள். ஈரோடு தேர்தல் முடிவுக்கு பின்னர் சிலர் காணாமல் போவார்கள்." எனப் பேசினார்.

நாளுக்கு நாள்
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, "இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருக்கிறது. நாளுக்கு நாள் சாதனைகளைச் செய்து இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் என்று ஸ்டாலின் பெயர் எடுத்துள்ளார். தமிழ்நாட்டில் சமூக நீதியை காப்பாற்றி வருகிறோம். இந்தியா முழுவதும் சமூக நீதி தற்போது வேகமாக பரவி வருகிறது எனத் தெரிவித்தார்.

அரசியல் ஆயுதமாக
மேலும், ஆளுநர் தொடர்பாக பேசிய கி.வீரமணி, "ஆளுநர் பதவி என்பது அண்ணா கூறியது போல ஆட்டுக்குத் தாடியை போல நாட்டுக்கு கவர்னர். ஆளுநர் தேவையில்லை. அரசியல் சட்டத்தில் என்ன கூறியுள்ளதோ அதை தவிர மற்றதைச் செய்வதுதான் தமிழ்நாடு ஆளுநரின் பணியாக உள்ளது. ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் மாளிகையாக மாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.

தொல்லை கொடுப்பதற்காகவே
எங்கெல்லாம் எதிர்க்கட்சியின் ஆட்சிகள் வருகின்றனவோ அங்கெல்லாம் தொல்லை கொடுப்பதற்காகவே குறுக்கு வழியில் அரசியல் ஆயுதமாக அரசியல் கருவியாக ஆளுநர் பயன்படுத்தப்படுவது தவறான முறை. அரசியல் சட்டத்திற்கு முரணாக உள்ள இந்த முறை தவிர்க்கப்பட வேண்டுமென்றால் ஆளுநர் பதவியே தேவையில்லை" என்று தெரிவித்தார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications