லேட்டாக வந்த கார்த்தி சிதம்பரம்! இங்க வாங்க.. இங்க வாங்க.. வரவேற்று மேடையேற்றிய ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சமத்துவபுரம் திறப்பு விழாவுக்கு காலதாமதமாக வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை, மேடைக்கு வருமாறு முதல்வரே நேரடியாக கவனித்து அழைப்பு விடுத்து நிகழ்வு நடந்துள்ளது.

இதையடுத்து மேடைக்கு வந்த கார்த்தி சிதம்பரத்தை முதல்வர் ஸ்டாலின் அருகில் நிற்குமாறு கூறி அமைச்சர் நேரு சற்று ஒதுங்கி நின்றுகொண்டார்.

Recommended Video

    லேட்டாக வந்த கார்த்தி சிதம்பரம்! இங்க வாங்க.. என்று மேடையேற்றிய ஸ்டாலின்!

    கூட்டணிக் கட்சி, எதிர்க்கட்சி என எந்தக் கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் அரசு விழாவில் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலின் இதன் மூலம் உணர்த்தியுள்ளார்.

    பெரியார் நினைவு

    பெரியார் நினைவு

    சிவகங்கை மாவட்டம் வேங்கைப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் இன்று சமத்துவபுரம் திறப்பு விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் அதில் பங்கேற்றார்.

    மேடைக்கு வாங்க

    மேடைக்கு வாங்க

    பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்துவிட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை முதல்வர் வழங்கிக் கொண்டிருக்கும் போது, கார்த்தி சிதம்பரம் எம்.பி. அங்கு வருகைப் புரிந்தார். மேடையில் பயனாளிகளுக்கு சாவியை கொடுப்பதில் பிஸியாக இருந்த ஸ்டாலின், அந்த பிஸிக்கு மத்தியிலும் கார்த்தி சிதம்பரம் வந்திருப்பதை கவனித்து அவரை நோக்கி இங்க வாங்க.. இங்க வாங்க.. தனது கைகளால் சைகை செய்தார்.

    நேரு ஒதுங்கினார்

    நேரு ஒதுங்கினார்

    முதல்வரின் அழைப்பை ஏற்று மேடையேறிய கார்த்தி சிதம்பரத்தை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., மற்றும் அமைச்சர் நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். மேடையில் இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இதனிடையே முதல்வர் பக்கத்தில் வந்து நிற்குமாறு கூறி கார்த்தி சிதம்பரத்துக்கு வழிவிட்டு அமைச்சர் நேரு சற்று ஒதுங்கி நின்று கொண்டார்.

    மக்கள் பிரதிநிதிகள்

    மக்கள் பிரதிநிதிகள்

    ஏற்கனவே கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனை மேடைக்கு வந்து அமருமாறு முதல்வரே நேரடியாக அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டணிக் கட்சி, எதிர்க்கட்சி என எந்தக் கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் அரசு விழாவில் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலின் இது போன்ற நிகழ்வுகள் மூலம் உணர்த்தியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+