'குறியீடு'.. கீழடியில் இதை கவனிச்சீங்களா.. ஆரிய கட்டு கதைகளை நொறுக்கிய 'போர்க்களம்'.. வெங்கடேசன் நச்
கீழடி அருங்காட்சியகம் குறித்து சு.வெங்கடேசன் எம்பி ட்வீட் செய்துள்ளார்
சிவகங்கை: சனாதானிகள் உருவாக்கும் கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் போர்க்களமாக வைகை இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகவும் பழமையான நாகரிகமாக சிந்து சமவெளி நாகரிகம் கருதப்பட்டு வந்த நிலையில், ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டிலும் ஒரு சமூகம் நாகரிகமாக வாழ்த்திருக்கிறது என்பதை கீழடி தொல்லியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி 5 கட்டங்களாக தற்போது கீழடியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் டேட்டிங் செய்து பார்த்தபோது அது சுமார் கி.மு 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரியவந்தது.
அதவாது இவ்வளவு பழமையான நாகரிம் இதுவரை சிந்து சமவெளி பகுதிகளில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த இந்தியாவுமே தமிழ்நாட்டை திரும்பி பார்த்தது. அதேபோல இங்கு கிடைத்த பொருட்களும் சிந்து சமவெளியில் கிடைத்த பொருட்களும் ஏறத்தாழ ஒரே மாதிரி ஒத்து போயின. மட்டுமல்லாது எழுத்துக்கள் பதியப்பட்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன.

வைகை கரை நாகரிகம்
இவை அனைத்தும் வைகை கரையோரத்தில் ஒரு நாகரிக சமூகம் வாழ்ந்திருக்கிறது என்பதை உறுதி செய்தது. இவ்வளவு பழமையான, தொன்மை கொண்ட தமிழ் சமூகத்திலிருந்தான் இந்தியாவின் வரலாறு தொடங்கப்பட வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரூ.18.43 கோடி மதிப்பில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் கீழடியில் 'கீழடி அருங்காட்சியகம்' உருவாக்கப்பட்டடு வந்தது. நேற்று இந்த அருங்காட்சியகம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்படது. இதில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

வேளாண் தொழில்
வைகை கரையோரம் வாழ்ந்த மக்களின் பிரதான தொழிலாக வேளாண் இருந்துள்ளது. இதன் மூலம் இம்மக்கள் பொருளாதார உயர்வை பெற்றிருக்கிறார்கள். இந்த வேளாண் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கீழடி அகழாய்வு பணிகள், தோற்றம், செயல்பாடுகள் போன்றவை குறித்து விரிவாக அறிந்துக்கொள்ளும் விதமாக 'விரிட்சுவல் ரியலிட்டி' மூலம் மக்களுக்கு காட்சிப்படுத்தபட்டுள்ளது. மேலும், சங்ககால மக்களின் கடல்சார் வணிகம் குறித்து அறிந்துக்கொள்ளும் விதமாக அக்காலத்தில் பயன்படுத்திய கப்பலின் மாதிரியும் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

காளை
எல்லவற்றிற்கும் மேலாக திமில் கொண்ட காளையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் சிறப்புகளை குறிப்பிட்டு, "சனாதானிகள் உருவாக்கும் கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் போர்க்களமாக வைகை இருக்கிறது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். ட்விட்டரில் இது தொடர்பாக அவர் கூறியிருந்ததாவது, "திமிலுள்ள காளையை அடையாளப்படுத்தியுள்ளனர். கீழடியில் கிடைத்துள்ள குறியீட்டு எழுத்துகள் எண்பது சதவிகிதம் சிந்துவெளி குறியீடுகளோடு பொருந்துகிறது. சிந்துவும் வைகையும் இம்மண்ணின் ஆதிப்பண்பாட்டின் தொடர்ச்சி.

போர்க்களம்
இந்துத்துவா சனாதானிகள் உருவாக்கும் ஆரிய- வைதீக கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும் இருக்கிறது. எனவேதான் "கீழடி எங்கள் தாய்மடி" என்று உரக்கச்சொன்னோம். விடாது குரலெழுப்பினோம். அனைத்து தளத்திலும் அனைவருடனும் இணைந்து செயல்பட்டோம். இந்த அரசியல் செயல்பாட்டிற்காக நேற்று நடந்த கீழடி அருங்காட்சியக திறப்புவிழாவில் தமிழக முதலமைச்சரால் சிறப்பு செய்யப்பட்டது மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications