Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹாலில் வந்த "சத்தம்".. முதல்ல ஸ்பிரே.. பரிதாப பெண்.. வாசலிலேயே பெரியசாமி.. புளியமரத்துக்கு ஓடிய லைகா

2 பெண்களை கொன்று, நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: விடிகாலையில் வீட்டுக்குள் புகுந்து, பெண்ணை படுகொலை செய்த கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கண்ணங்கோட்டை என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் செல்லையா... மனைவி பெயர் கனகம்.. இவர்களுக்கு 3 மகள்கள். 3 பேருக்குமே கல்யாணமாகிவிட்டது..

இதில் கடைசி மகள் வேலுமதி.. இவருக்கு 35 வயதாகிறது.. பாகடி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவருக்கு இவரை திருமணம் செய்து தந்தனர்.. குமார் இப்போது மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.

 ஹாலில் பகீர்

ஹாலில் பகீர்

வேலுமதி தன்னுடைய 12 வயது மகன் மூவரசுடன், அம்மா வீட்டிலேயே வசித்து வருகிறார்.. மூவரசு, தேவகோட்டை ராம்நகரில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்... இந்தநிலையில் வேலுமதியின் அக்கா மகள் சாந்திக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.. இதற்காக 2 நாட்களுக்கு முன்பு நகைக்கடைக்கு சென்று, நகைளையும், வெள்ளி பொருட்களையும் வாங்கி வைத்து, கனகம் வீட்டில் அதாவது வேலுமதியின் அம்மா வீட்டிலேயே வைத்திருந்தனர். மறுநாள் இரவு, கனகம், வேலுமதி, மூவரசு ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர்... அனைவருமே ஹாலில் தூங்கி கொண்டிருந்தனர்.

 ஸ்பிரே

ஸ்பிரே

அப்போது விடிகாலை நேரத்தில் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்துவிட்டனர்.. சத்தம் கேட்டு வேலுமதி கண்விழித்துள்ளார். ஆனால், அதற்குள் வேலுமதியின் முகத்தில் அவர்கள் ஸ்பிரே அடித்துவிட்டனர்.. கத்தி கூச்சல் போடுவதற்குள், அவரது தலையிலும் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கினர்.. அத்துடன் நில்லாமல், அரிவாளாலும் வேலுமதியின் முகத்தில் சரமாரியாக வெட்டினர்.. அலறல் சத்தம் கேட்டு, கனகமும், மூவரசனும் எழுந்தபோது, அவர்களையும் அரிவாளால் மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.. பிறகு, பீரோவை உடைத்து, கல்யாணத்துக்கு வாங்கி வைத்திருந்த 60 பவுன் நகைகள், மற்றும் 30 வெள்ளி பொருட்களையும் அந்த கும்பல் வாரிசுருட்டிக்கொண்டது.

மிளகாய்பொடி

மிளகாய்பொடி

அங்கிருந்து தப்பி செல்லும்போது, வீட்டின் வாசலில் மிளகாய் பொடியையும் கொட்டிவிட்டு, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.. இதனிடையே வீட்டிற்குள் 3 பேருமே ரத்த வெள்ளத்தில் விழுந்து, உயிருக்கு போராடிக்கொண்டே இருந்தனர்.. வீட்டிற்குள்ளே அவர்கள் கத்தியதும், அக்கம்பக்கத்தில் யாருக்குமே கேட்கவில்லை.. பிறகு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர், காலை நேரத்தில், கனகத்தின் வீட்டுக்கு வந்தார்.. வெளியில் நின்று கொண்டே அவர் வீட்டில் இருந்தவர்களை கூப்பிட்டார்.. ஆனால் யாருமே வெளியே வரவில்லை.. பதிலும் சொல்லவில்லை..

 புளியமரம் லைகா

புளியமரம் லைகா

இதனால், குழம்பிப்போய் பெரியசாமி வாசலிலேயே நின்றிருந்தபோது, அந்த வீட்டின் ஜன்னல் வழியாக மூவரசு எட்டிப்பார்த்தான்.. அதிர்ச்சியில் உறைந்துகிடந்த அவன் எதுவுமே பேசமுடியாமல், ஜன்னல் வழியாக வெறும் சைகையை மட்டும் காண்பித்தான்.. இதை பார்த்து பதற்றம் அடைந்த பெரியசாமி, அப்போதுதான் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு வேலுமதி கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், கனகம் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததையும், மூவரசு படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெரியசாமி, உடனடியாக தேவகோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

மோப்பநாய்

மோப்பநாய்

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயத்துடன் உயிருக்கு போராடிய கனகம், மூவரசு ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டது.. ஆனால், கனகமும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. கொலை செய்யப்பட்ட வேலுமதி உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.. போலீசார் விசாரணையை உடனடியாக துவக்கினர்.. மோப்ப நாய் லைகா, விரைந்து வந்தது.. அந்த வீடு முழுவதும் மோப்பம் பிடித்துவிட்டு வெளியே வேகமாக ஓடியது.. அந்த பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தின் அருகே சென்று லைகா நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

நோட்டீஸ்

நோட்டீஸ்

இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 தனிப்படைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.. திருமணத்துக்காக நகைகள் வாங்கி வீட்டில் வைத்திருந்ததை நோட்டமிட்டு தெரிந்து கொண்ட கும்பல்தான் இந்த பயங்கர சம்பவத்தை செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் போலீசார்.. அதேசமயம், அந்த வீட்டைப்பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பவரின் துணையுடன் தான் இந்த கொள்ளை நடந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.. அந்த வீட்டில் 4 பீரோக்கள் இருந்துள்ளன.. 4 பீரோவையுமே உடைத்துள்ளனர்.. கொள்ளையடித்த நகைகளின் மதிப்பு 20 லட்சம் என்கிறார்கள்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+