வீரமரணமடைந்த வீரர்களுக்கு தேவகோட்டையில் பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
தேவக்கோட்டை: வீரமரணமடைந்த வீரர்களுக்கு தேவக்கோட்டையில் உள்ள பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களுக்கு நாடு முழுவதும் ஆங்காங்கே அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications