சிவகங்கையில் திமுக தான் நிற்கணும்! உடன்பிறப்புகள் போர்க்கொடி! கார்த்தி சிதம்பரத்துக்கு கல்தா?

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு எக்காரணத்தை கொண்டும் ஒதுக்கக் கூடாது என கச்சைக் கட்டி நிற்கின்றனர் சிவகங்கை மாவட்ட திமுகவினர்.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் சிவகங்கை தொகுதியை திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கி வந்த நிலையில் இந்த முறை எதிர்ப்பு சற்று பலமாக உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கொடுக்க திமுகவினர் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் மட்ட நிர்வாகிகள் சிலரும் எதிர்ப்பு தெரிவிப்பது தான் ஹைலைட்.

DMK Executives opposes allotment of Sivaganga constituency to Congress

கார்த்தி சிதம்பரத்தின் கடந்த 5ஆண்டுகால நடவடிக்கைகளும், தடாலடியான கருத்துக்களும் சிவகங்கை மாவட்ட திமுகவினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அதுமட்டுமல்ல கார்த்தி மீது தமிழக காங்கிரஸ் தலைமையும் கடும் அதிருப்தியில் தான் இருந்து வருகிறது.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளன. கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் ப.சிதம்பரம் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுவாமிநாதன், சுதர்சன நாச்சியப்பன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கின்றனர்.

இடையிலே 2014 முதல் 2019 வரையிலான கால கட்டத்தில் மட்டும் அதிமுகவை சேர்ந்த செந்தில்நாதன் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்திருக்கிறார். இதனிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதால் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இனி அந்த விதியை முதல்வர் ஸ்டாலின் மாற்றி எழுதுவார் என நம்பிக்கை பொங்க எதிர்பார்க்கிறார்கள் சிவகங்கை மாவட்ட உடன்பிறப்புகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+