சிவகங்கை தொகுதியை சீரியஸாக பார்க்கும் திமுக! கார்த்தி சிதம்பரம் நிலைமை சிக்கல்!
சிவகங்கை: சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது என திமுகவினர் ஒரு பக்கம் கச்சைக் கட்டி நிற்கிறார்கள் என்றால் மற்றொரு பக்கம் கார்த்தி சிதம்பரத்துக்கு மட்டும் சீட் கொடுத்துவிடக் கூடாது என காங்கிரஸ் நிர்வாகிகளே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
வழக்கம் போல் இந்த விவகாரத்தை பார்க்காமல் சற்று சீரியஸாகவே பார்க்கத் தொடங்கியிருக்கிறது திமுக தலைமை. ஏனெனில் 'பென்' நிறுவனம் கொடுத்த ரிப்போர்டிலும் கார்த்தி சிதம்பரத்தின் செயல்பாடுகள் பற்றி அவ்வளவு திருப்திகரமாக இல்லை. ஏடாகூடமாக பேட்டி கொடுப்பது, கட்சித் தலைமையையே உதாசீனப்படுத்துவது, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அலைக்கழிப்பது என அவர் மீதான பல சர்ச்சைகள் தொடர்கின்றன.

சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை தொடர்ந்து கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கி வருகிறது திமுக. அதுபோல் இந்த முறை ஒதுக்கக் கூடாது என்பது சிவகங்கை மாவட்ட திமுகவினரின் கோரிக்கையாக உள்ளது. சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளன.
கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் ப.சிதம்பரம் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுவாமிநாதன், சுதர்சன நாச்சியப்பன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கின்றனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பது பரவலாக உள்ள குற்றச்சாட்டாகும்.
2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அதிமுகவை சேர்ந்த செந்தில்நாதன் சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்திருக்கிறார். இதனிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதால் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இனி அந்த விதியை முதல்வர் ஸ்டாலின் மாற்றி எழுதுவார் என நம்பிக்கை பொங்க எதிர்பார்க்கிறார்கள் சிவகங்கை மாவட்ட உடன்பிறப்புகள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications