ஓபிஎஸ் பற்றி பேச எடப்பாடிக்கு என்ன தகுதி இருக்கு? “நன்றிகெட்டவர்”: காட்டமாக விமர்சித்த வைத்திலிங்கம்
சிவகங்கை: ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் சந்திப்பை விமர்சனம் செய்யும் தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி என ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் காட்டமாகப் பேசியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இந்தச் சூழலில் அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கி தனியாகச் செயல்பட்டு வரும் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பாக கருத்த தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, மாய மானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது, பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான் என்றார். மேலும் டிடிவி.தினகரனை ஓபிஎஸ் சந்திக்கும்போது ஓபிஎஸ்ஸுடன் எப்போதும் இருக்கும் 3 பேர் எங்கே? வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகிய 3 பேரும் ஓபிஎஸ்ஸை கைவிட்டுவிட்டனர் எனத் தெரிவித்தார்.
இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பதால் அவர்கள் தனியாகப் பேசட்டும், நாம் செல்ல வேண்டாம் என முடிவு செய்தே நாங்கள் உடன் செல்லவில்லை, துரோகி பழனிசாமிக்கு எங்களை விமர்சிக்கும் தகுதி இல்லை என்றார்.

இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய வைத்திலிங்கம், டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்திப்பை விமர்சனம் செய்யும் தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி எனக் காட்டமாகக் கூறினார்.

மேலும், ஈபிஎஸ்ஸை முதல்வர் ஆக்கியது டிடிவி தினகரனும் சசிகலாவும் தான். எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதல்வராக இருக்க உறுதுணையாக இருந்தவர் ஓபிஎஸ். இவர்கள் இல்லை என்றால் ஈபிஎஸ் அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமாகி இருக்கும். ஆனால், நன்றி கெட்ட தனமாக பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆயிரம் எடப்பாடிகள் வந்தாலும் அதிமுகவை வழி நடத்த முடியாது என்றும் விமர்சித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications