"பிரதமர் அப்படி சொல்லலையே..” இதை நிரூபிச்சிட்டா அரசியலை விட்டே விலகுறேன் - ஒரே போடாக போட்ட எச்.ராஜா!
சிவகங்கை : பிரதமர் மோடி அவ்வாறு சொன்னதாக திமுக அமைச்சர் நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில், திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான் என பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் ஜூன் 20ஆம் தேதி 60 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் எச்.ராஜா.

பெட்ரோல் டீசல் விலை
சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 குறைக்கப்படும் என தி.மு.க தெரிவித்தது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. 3 ரூபாய் மட்டும் குறைத்துள்ளார்கள். பா.ஜ.க ஒரு கோரிக்கை வைத்துள்ளது. தி.மு.க அதன் தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளோம். ஜூன் 30ஆம் தேதிக்குள் தி.மு.க அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்.

ஜூன் 30ல் பேரணி
பெட்ரோல், டீசல் விலையை திமுக வாக்குறுதி அளித்தபடி குறைக்காவிட்டால் ஜூன் 20ல் தமிழகத்தில் 60 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் இருப்போம். ஜூன் 30ஆம் தேதி திருச்சியில் பா.ஜ.க சார்பில் பேரணி நடத்தப்படும்.

அரசியலை விட்டே விலகுகிறேன்
அமைச்சர் பெரியகருப்பன் பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கும் பிரதமர் மோடி ரூ.15 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் பிரதமர் கூறியதை புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எடுத்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்த முடியும் என்று தான் கூறியுள்ளார். எங்கேயாவது பிரதமர் ரூ.15 லட்சம் தருவதாக கூறியுள்ளார் என்பதை அமைச்சர் பெரியகருப்பன் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன்.

திராவிட மாடலுக்கு மாற்று
தேர்தலில் பொய்யான வாக்குறுதி அளித்து, வாக்குகளை பெறுவதற்கு பெயர் தான் திராவிட மாடல். தமிழகத்தில் பிரிவினைவாத திராவிட மாடலுக்கு மாற்று தேசியம் தான். தமிழக மக்கள் அதை புரிந்து கொண்டனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தி.மு.க அரசு ஒவ்வொரு துறையிலும் ஊழல் புரிந்து வருகிறது. இந்த ஊழல் அரசை விரட்டி அடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார் எச்.ராஜா.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications