உதயநிதி ஒரு மண்டு.. திருப்பி அடிச்சா தாங்க மாட்டார்.. ஒழுங்கா நடந்துக்கணும்.. சீறிய எச்.ராஜா!
சிவகங்கை: எங்களின் சீண்டலை எதிர்கொள்ளும் அளவில் திமுக இல்லை. திமுகவில் இருப்பவர்கள் கிழடுகட்டைகள் தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியுள்ளார்.
திமுக எம்.பி கனிமொழியை தரக்குறைவாக விமர்சித்தது, பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது உள்பட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, தன்னோட Mental Balance-ஐ இழந்துள்ளார் என்பது சமீபகாலங்களில் அவர் பேசக்கூடிய பேச்சுகளில் இருந்து தெரிகிறது" என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதற்குப் பதிலாக மு.கருணாநிதி எனக் கூறினார் எச்.ராஜா.
தொடர்ந்து பேசிய எச்.ராஜா, "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயக் கோளாறு வரும் அளவுக்கு மத்திய அரசு நடந்து கொள்வதாக பேசி இருக்கிறார். சீண்டிப்பார்க்க வேண்டாம் எனப் பேசியிருக்கிறார். செந்தில் பாலாஜியின் இதயத்தில் உள்ள அடைப்பை கண்டுபிடித்து உயிரை காப்பாற்றிய அமலாக்கத்துறைக்கு முதல்வர் நன்றி சொல்ல வேண்டும்.
மேலும், எங்களின் சீண்டலை எதிர்கொள்ளும் அளவில் திமுக இல்லை. திமுகவில் இருப்பவர்கள் கிழடுகட்டைகள் தான். பொதுச் செயலாளர், நிர்வாகிகள் என எல்லோரும் 75 வயதுக்கு மேல் இருப்பவர்கள் தான். இளைஞர்கள் அதிகம் உள்ள பாஜகவை முதல்வர் சீண்டி பார்க்க வேண்டாம்.
திமுகவினர் தரம் கெட்டவர்கள். நல்ல நடவடிக்கை இல்லாதவர்கள் உள்ள கட்சி திமுக. ஆளுநர் ராஜினாமா செய்துவிட்டு ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலில் நின்றால் மக்கள் செருப்பால் அடிப்பார்கள் எனப் பேசி இருக்கிறார் உதயநிதி. ஒரு ஆளுநரை பார்த்துப் பேசும் பேச்சா அது?
உதயநிதி ஒரு மண்டு. ஐபிஎஸ் பரீட்சையில் வெறும் 5% மார்க் வாங்குவாரா உதயநிதி ஸ்டாலின்? புத்தகங்களைப் பார்த்து புரிந்துகொள்ள முடியாதவர்கள் ஆளுநரை செருப்பால் அடிப்பார்கள் என்று பேசுவதா? ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். எங்கள் பாணியில் திருப்பி அடித்தால் உதயநிதி ஸ்டாலினால் தாங்க முடியாது.
நீட் தேர்வை திமுக எதிர்ப்பது கொள்ளையடிப்பதற்கு தான். நீட் தேர்வு மாணவர்களுக்கு சாதகம் செய்துள்ளது. நீட் தேர்வு, மாணவர்களின் சுமையைக் குறைத்துள்ளது. உதயநிதி பேசுவது உதார். திமுக உண்ணாவிரதம் உதார். எல்லாம் திமுகவின் பொய் நாடகம்.
வரும் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நீட் தேர்வு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் திமுகவினர் ஊழலை பரவலாக்கி உள்ளனர். இது திருட்டு பசங்களின் சர்க்கார்" என கடுமையாக விமர்சித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications