சிவகங்கை தொகுதியை சிங்கப்பூராக மாற்றுவார் ஹெச் ராஜா… தடாலடி பிரச்சாரம்
காரைக்குடி: சிவகங்கை தொகுதியை சிங்கப்பூராக ஹெச்.ராஜா மாற்றுவார் எனக் கூறி பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளருமான ஹெச். ராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

காரைக்குடி கழனி வாசலில் உள்ள ஜவுளி அம்மன் கோயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பொதுமக்களிடம் பாஜகவின் ஐந்தாண்டு கால சாதனைகளை எடுத்துக்கூறி, தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: விலைவாசி உயர்வு என்று எங்காவது , ஒரு போராட்டமாவது பாஜக ஆட்சியில் நடைபெற்றுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
விலைவாசியை பற்றி எவருமே பேச முடியாத தேர்தலாக இந்த தேர்தல் உள்ளது. முந்தைய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசில், 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட பருப்புவகைகள், இப்போது 70 ரூபாய்க்கு விற்பதாக கூறினார்.
40 ரூபாய்க்கு விற்கப்பட்ட சர்க்கரை 35 ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும், நடுத்தர, கீழ் நடுத்தர மக்கள் இந்த ஆட்சியில் மளிகை பொருட்களின் விலைவாசி உயர்வு இல்லாமல் நிம்மதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏழை, எளிய மக்கள் பாஜக ஆட்சி தொடர வேண்டும் என நினைப்பதாகவும் ஹெச். ராஜா கூறினார். மேலும், பிரச்சாரத்தின் போது, ஹெச். ராஜாவுக்கு வாக்கு சேகரித்த பாஜகவினர், சிவகங்கை தொகுதியை சிங்கப்பூராக ஹெச்.ராஜா மாற்றுவார் என்றனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications