"ஹெவி பிரஷர்".. திமுகவில் வெட்ட வெளிச்சமாயிடுச்சே.. இப்ப கிறிஸ்டியன் உதயநிதி வேற.. எச்.ராஜா ஒரே போடு
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திமுக அரசை சரமாரியாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார்
சிவகங்கை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மீண்டும் ஒருமுறை திமுக அரசை சரமாரியாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார்.. இதையடுத்து, திமுக தரப்பு இதற்கு கடுப்பாகி இணையத்தில் திரண்டு பதில் சொல்லி கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தது முதலே, திமுக கட்சி கொள்கைகள் குறித்தும், மத அமைப்பு குறித்தும் எத்தனையோவிதமான சர்ச்சைகள் கிளம்பின.
அடிப்படையில் கடவுள் மறுப்பு கொள்கையில் வளர்ந்த கட்சி என்பதால், இப்படியான கருத்துகள் எழுந்தாலும், பல்வேறு மதம் சார்ந்த, கோவில் சார்ந்த வளர்ச்சி பணிகள் மூலம் தாங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதாக திமுக தன்னை அபரிமிதமாகவே வெளிப்படுத்தி வருகிறது.

தர்மசங்கடம்
இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது, எதிர்கட்சிகளிடையே தொடர்ந்து கண்டனங்களை உண்டுபண்ணி வருகிறது.. முதல்வர் குறித்த இந்த சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில்தான், சமீபத்தில் ஸ்டாலினே இதற்கு பதில் சொல்லியிருந்தார்.. "நான் மதவாதத்திற்குதான் எதிரியே தவிர, மதத்திற்கு அல்ல" என்று கூறியிருந்தார்.. ஆனால், இதையும் பாஜக விமர்சித்தபடியே உள்ளது.. 2 நாட்களுக்கு மூத்த தலைவர் வானதி சீனிவாசன் இதை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

ஹேப்பி வானதி
"நாங்கள் மதவாதத்திற்குதான் எதிரியே தவிர மதங்களுக்கு அல்ல என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்.. மதங்களுக்கு எதிரி இல்லை என்றால் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் முதல்வர் வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்? இனி இந்து மத பண்டிகைகளுக்கும் அவர் வாழ்த்து சொல்ல வேண்டும்... மேலும் இந்து மத கோயில்கள், மடங்களின் விவகாரங்களில் தலையிட கூடாது. அதுதான் மதங்களை மதிப்பது, உண்மையான மதசார்பின்மை" என்று வானதி பேசியிருந்தது, பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிலையில், அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும், தேசிய முன்னாள் செயலாளருமான எச்.ராஜாவும், ஸ்டாலின் பேச்சையும், திமுக அரசையும் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

திராவிடியன் ஸ்டாக்
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, "ஒவ்வொரு பொங்கலுக்கும் "திராவிட மாடல்" அரசின் ஊழல் வெளிச்சத்திற்கு வரும். அதேபோன்று இந்த வருடமும் விவசாயிகளிடம் வாங்கும் கரும்பு கொள்முதலில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. ஒரு கரும்புக்கு கூலி உட்பட ரூ.17 மட்டுமே விவசாயிகளிடம் பேசியுள்ளனர். இதற்கு போக்குவரத்து செலவு ரூ.3 மட்டுமே.. ஆனால் கரும்புக்கு ரூ.33 என பொய் கணக்கு எழுதுகின்றனர். கரும்பு ஒன்றுக்கு விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.30 யை தமிழக அரசு வழங்க வேண்டும். சிங்கம்புணரி சீரணி அரங்கில் வேறு கட்டிடங்கள் கட்டக்கூடாது. இந்திய ஒன்றியம் என்ற வார்த்தையை தேச துரோகிகள் பயன்படுத்துகின்றனர்..

கிறிஸ்டியன் உதயநிதி
அதன்படி தமிழ்நாடு என்ற வார்த்தையை தனிநாடு அர்த்தத்தை கொடுக்கும் வகையில் பிரிவினையாக பேசியும் வருகின்றனர்.. தீபாவளி பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறினால்தான் அவர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர். நானும், என் மனைவியும் கிறிஸ்தவர்கள் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருக்கிறார்.. இந்து விரோத தீய சக்திகளை கைது செய்யாமல், தன்னை இந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல என முதல்வர் ஸ்டாலின் சொல்ல முடியாது. தமிழக போலீஸ் மதரீதியாக பாரபட்சம் பார்த்தே நடவடிக்கை எடுக்கிறது" என்று குற்றம் சாட்டி உள்ளார் எச்.ராஜா.

சர்ச், மசூதி
இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, திமுக நடத்திய கிறிஸ்தவ விழாவை எச்.ராஜா விமர்சித்திருந்தார்.. அமைச்சர் சேகர்பாபுவா? அல்லேலுயா பாபுவா? என்று எச்.ராஜா காட்டமாக கேட்டிருந்த அதேநேரத்தில், உதயநிதியின் பேச்சையும் கிண்டல் செய்திருந்தார்.. முதல்வரின் மகன் உதயநிதியும், அவரது மருமகள் கிறிஸ்தவர்களாக இருப்பதால்தான் இந்துமக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள். சர்ச்களையோ, மசூதிகளையோ, கைப்பற்ற முதுகெலும்பு உள்ளதா அந்த கிறிஸ்டியன் உதயநிதிக்கு? என்று எச்.ராஜா கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications