ஆசை ஆசையாக.. காரைக்குடி மீனாட்சி வைத்த இட்லி "சாம்பார்".. கிச்சனில் அந்த காட்சி.. விக்கித்த சிவகங்கை
சிவகங்கை: காரைக்குடியில் இன்று நடந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இது தொடர்பான வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்து கொண்டிருக்கின்றன. என்ன காரணம்?
சமீபகாலமாகவே, ஓட்டல்களிலும், இறைச்சி கடைகளிலும் தரமற்ற இறைச்சியை விநியோகிக்கப்பதாக புகார்கள் வெடித்து வருகின்றன.. இதையடுத்து அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரபலமான ஓட்டல்கள் முதல் நடைபாதை உணவகங்களில் சோதனை நடத்துகிறார்கள்.. புகார்கள் உண்மையாகும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, இறைச்சி கூடங்களில், மீன் மார்க்கெட்டுகளிலும் நேரடியாகவே சென்று, அவைகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
ராஜஸ்தான்: கடந்தவாரம்கூட, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மதுரை சென்ற பிக்கானீர் எக்ஸ்பிரஸ் ரெயிலில், கெட்டுப்போன இறைச்சி கடத்திக்கொண்டு வரப்பட்டதாக, சென்னை எக்மோர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், ஸ்டேஷனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சோதனை நடத்தியதில், 1700 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறி இருப்பதை பார்த்து அதிர்ந்தனர். ஆடுகளை வெட்டி ஒரு வாரம் கழித்து இப்படி ரயிலில் கொண்டுவந்திருக்கிறார்கள்.
வெட்டி உரிக்கப்பட்ட ஆடுகளை, தெர்மாகோல் பெட்டிகளில் மடக்கி வைக்கப்பட்டு, கெட்டுப்போய் நாற்றம் அடித்துள்ளது. அவைகளை பறிமுதல் செய்தபோதுதான், கண்டெய்னரில் வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ எடை கொண்ட இறைச்சி பெட்டி திடீரென காணாமல் போய்விட்டது.
திடீர் மாயம்: எக்மோர் ஸ்டேஷன் வருவதற்கு முன்பே அந்த பெட்டிகளை யாரோ திருடி கொண்டுபோய்விட்டார்கள். 1000 கிலோ கெட்டுப்போன இறைச்சி எங்கே போனது? எங்கே கொண்டு போய் விற்றார்கள் என தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளும் விசாரணை நடத்தியிருந்தனர்.
ஓட்டல்களிலும் இதே நிலைமைதான்.. பிரபலமான ஓட்டல் என்று நேரில் சென்று சாப்பிட்டாலும் சரி, ஆர்டர் செய்து சாப்பிட்டாலும்சரி, சில சமயங்களில், சுகாதாரமற்ற உணவுகளை கஸ்டமர்கள் சாப்பிட வேண்டிய கொடுமை நடந்துவிடுகிறது.
மன்னார்குடி: கடந்தவாரம் மன்னார்குடி பெரிய கடை வீதியில் உள்ள பிரபலமான உயர்தர சைவ உணவகத்தில் பொடி தோசை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார் பிரவீன்குமார் என்பவர்.
பொடி தோசையுடன் வைக்கப்பட்டிருந்த கார சட்னியை தொட்டு சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்.. அப்போதுதான், திடீர்னு காரசட்டினியில் முசுக்கட்டை பூச்சி செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே பிரவீன் குமாருக்கு குமட்டல், வாந்தி, மயக்கம் என அடுத்தடுத்தாக ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
காரைக்குடி: இதோ இன்றைய தினம் கரைக்குடி ஓட்டல் சாம்பாரில் பல்லி இருந்திருக்கிறது.. காரைக்குடி புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு மீனாட்சி உணவகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை நோயாளி ஒருவருக்கு, அவரது உறவினர் இட்லி வாங்குவதற்காக மீனாட்சி ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு வாங்கிச்சென்ற இட்லிக்கு கொடுத்த சாம்பாரில் பல்லி இருந்துள்ளது.
உடனே இது தொடர்பான புகார் சென்றதையடுத்து, சிவகங்கை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள், நேரடியாக ஓட்டலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஓட்டல் சாம்பார்: ஓட்டலுக்குள் காலாவதியான உணவு பொருட்கள் ஏராளமாக இருந்துள்ளன.. பூரி, புரோட்டா, கோழிக்கறி சமையல் மசாலா பொருள்கள், மற்றும் அழுகிப்போன காய்கறிகள், பிளாஸ்டிக் பொருட்களில் இருந்த பழைய உணவு பொருட்கள் என அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த ஓட்டலிலுள்ள கிச்சனும், சுகாதாரமின்றி காணப்பட்டதை கண்டு அதிர்ந்த அதிகாரிகள், சமையலறையை 5 நாட்களில் சுத்தப்படுத்தி சரிசெய்ய வேண்டும் என்றும், அதுவரை ஓட்டலை மூடவும் உத்தரவிட்டனர்.. அத்துடன், ஓட்டலுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்தனர்.
அந்த ஓட்டலிலுள்ள கிச்சனும், சுகாதாரமின்றி காணப்பட்டதை கண்டு அதிர்ந்த அதிகாரிகள், சமையலறையை 5 நாட்களில் சுத்தப்படுத்தி சரிசெய்ய வேண்டும் என்றும், அதுவரை ஓட்டலை மூடவும் உத்தரவிட்டனர்.. அத்துடன், ஓட்டலுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கொடுமை: அரசு மருத்துவமனைகளுக்கு எதிரிலேயே ஓட்டல்களை வைத்துள்ளதால், நோயாளிகளுக்கு இங்குதான் உணவுகளை வாங்க வேண்டியிருக்கிறது. நோயாளிகளுக்கு பெரும்பாலும் இட்லி, சட்னி, சாம்பார் போன்றவைகளையே அதிகம் சாப்பிட தரவேண்டியிருக்கும்.. அப்படியிருக்கும்போது, இன்று ஹோட்டல் சாம்பாரில் பல்லி கிடந்துள்ளது.. பழைய உணவு பொருட்களில் புழு, பூச்சிகளும் இருந்துள்ளது.... இதுக்கெல்லாம் வெறும் 5000 ரூபாய்தான் அபராதமா????? மனித உயிர்களின் மதிப்பு இவ்வளவுதானா???
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications