40ம் நமக்கே.. .. அபார வெற்றி பெறுவோம் தீவிரப் பிரச்சாரத்தில் கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெறும். ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
@INCIndia @INCTamilNadu @arivalayam @mkstalin @RahulGandhi pic.twitter.com/qPo769wJaD
— Karti P Chidambaram (@KartiPC) March 26, 2019
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு அவர் பிரச்சாரத்தைடயும் தொடங்கி விட்டார்.

பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்திலும் புதுவையிலும் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவது உறுதி. ஆட்சி மாற்றம் மக்களால் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று கார்த்தி சிதம்பரம் தனது பிரச்சாரத்தின்போது கூறினார்.
கார்த்தி சிதம்பரத்தோடு பெரும் திரளான காங்கிரஸாரும், திமுகவினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபக்கம் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக எச். ராஜா தீவிரப் பிரச்சார்தில் ஈடுபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications