தேர்தல் பத்திரம் விபரம் வேணும்! சிவகங்கை எஸ்பிஐ மேலாளரிடம் கேட்ட கார்த்தி சிதம்பரம்.. பரபர வீடியோ
சிவகங்கை: தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை வெளியிட அவகாசம் கோரிய எஸ்பிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சிவகங்கை வங்கியின் மேலாளரை சந்தித்து வலியுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் உள்ள கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்கான தேர்தல் பத்திரங்கள் எஸ்பிஐ எனும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையி்ல தான் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுவது வெளிப்படைத்தன்மையுடன் இல்லை எனவும், அதனை செல்லாது எனவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

மேலும் தேர்தல் பத்திர திட்டம் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்ததோடு, தேர்தல் பத்திரம் வழங்குவதை நிறுத்த வேண்டும். 2019ம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விபரங்களை மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். அதனை மார்ச் 13க்குள் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய் வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் உச்சநீதிமன்றம் கூறிய தேதி கடந்துவிட்டது. எஸ்பிஐ-யில் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. மாறாக தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை வெளியிட காலஅவகாசம் வேண்டும் எனக்கூறி வங்கி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தேர்தல் பத்திரம் விபரங்களை வெளியிட ஜுன் 30ம் தேதி வரை காலஅவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வழங்க வங்கி காலஅவகாசம் கோருவது என்பது பாஜகாவை காப்பாற்றும் செயல் என குற்றம்சாட்டி உள்ளது. ஏனென்றால் தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடையை பாஜக தான் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு நன்கொடை வழங்கியவர்கள் விபரங்களை மறைக்கவே வங்கி இப்படி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இந்நிலையில் தான் தேர்தல் பத்திரம் விபரங்களை வெளியிட காலஅவகாசம் கோரும் எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் எஸ்பிஐ வங்கியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் தான் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலக எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில், பாஜக அரசுக்கு சாதகமாக நடந்த கொள்ளும் எஸ்பிஐ-யை கண்டிக்கும் விதமாக சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவங்ககை எம்பி கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்ட பின்னர் இதுகுறித்து கிளை மேலாளரிடம் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@BJP4India அரசுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் @TheOfficialSBI கண்டிக்கும் விதமாக சிவகங்கையில் @INCIndia @INCTamilNadu சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிவகங்கை MP திரு.@KartiPC அவர்கள் கலந்து கொண்ட பின்னர் இது குறித்து கிளை மேலாளர் அவர்களிடம் தமது எதிர்ப்பை தெரிவித்தார்கள் pic.twitter.com/LujApAE06U
— Karti PC Office (@KartiPCoffice) March 7, 2024
மேலும் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் கார்த்தி சிதம்பரம் எஸ்பிஐ வங்கி மேலாளருடன் பேசுகிறார். அப்போது கார்த்தி சிதம்பரம், ‛‛நியாயப்படி தேர்தல் பத்திரம் தொடர்பான விபரங்களை கொடுக்கனும். ஆனால் கொடுக்காமல் காலஅவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளீர்கள். அதுவும் விசாரணைக்கு வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் நான் உங்களை எதுவும் சொல்லவில்லை.
இங்கு வங்கியின் பிரதிநிதி என்ற முறையில் நீங்கள் இருப்பதால் நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். மேலும் தேர்தல் பத்திரம் விபரங்களை வெளியிட காலஅவகாசம் கோரும் மனுவை திரும்ப பெற வேண்டும். இதுபற்றி மேலதிகாரியிடம் கூற வேண்டும் என்பதற்காக உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்'' என்றார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications