சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறையில் சவுக்கு சங்கர்.. இது ரொம்ப “ஓவர்”! பாஜக கனவு காண “நோ டேக்ஸ்” - கார்த்தி சிதம்பரம் “கலாய்”

Google Oneindia Tamil News

சிவகங்கை: அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு அளிக்கப்பட சிறை தண்டனை அதிகமானது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை இதை தவிர்த்து இருக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சேவனிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் திறப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், "தமிழகத்தில் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் சர்ச்சையாக்கி வருகின்றனர். ஆக்கபூர்வமான விஷயங்களை பேசாமல், உணர்வு, உணர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை தமிழக அரசியலில் பேசுவது வருத்தமளிக்கிறது.

பிறந்தநாள் அதுவுமா.. “மோடி” படத்துக்கு மாலையுடன் படையல் - “காவி குர்தா” செய்த செயல் -டிஆர்எஸ் கேள்வி பிறந்தநாள் அதுவுமா.. “மோடி” படத்துக்கு மாலையுடன் படையல் - “காவி குர்தா” செய்த செயல் -டிஆர்எஸ் கேள்வி

மின் பிரச்சனை

மின் பிரச்சனை

தமிழ்நாடு மின் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையை குறைக்காத வரை, மின் பிரச்சனைகள் தீராது. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் 30% தகுதியற்றவை. அவற்றை மூட வேண்டும். அதற்கு மாற்றாக மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும். மின் உற்பத்திக்கான பழைய ஒப்பந்தங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர்

அனைவரையும் கடுமையாக விமர்சிக்கும் சவுக்கு சங்கருக்கு, கொடுக்கப்பட்ட தண்டனை அதிகமானது, தேவையற்றது. இதனை நீதிமன்றம் தவிர்த்து இருக்க வேண்டும். தமிழகத்தில் 40 இடங்களை பிடிக்க பாஜக கனவு காண்பதற்கு தடையும் இல்லை. அதற்கு வரியும் இல்லை." என அவர் நகைச்சுவையாக தெரிவித்தார்.

என்ன வழக்கு?

என்ன வழக்கு?

பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் விடுதலை தொடர்பாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சித்து பதிவிட்டார். இதனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு தாமாக சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

6 மாதம் சிறை

6 மாதம் சிறை

உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறினார். இந்த வழக்கு தொடர்பாக வாதங்கள் முடிவடைந்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.

English summary
Sivakangai Congress MP Karti Chidambaram said that the prison sentence given to political critic Savukku Shankar was excessive and the Madurai branch of the High Court should have avoid it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X